பக்கம்:பஞ்சதந்திரக் கதை.djvu/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாயிரம்

இசராசாக்கள்‌ அல்லது சனங்கள்‌ நீதி நியாயமுள்ள சண்டைசெய்கிறபோது தங்கள்‌ சத்‌துருக்களை வெல்லுதற்குச்‌ சில வுபாயதந்திரங்‌கள்‌ வழங்கலாமென்று எவரு மொத்துக்கொண்டாலும்‌ அவைகள்‌ பொதுப்பட மனிதர்களுக்குள்ளே வழங்கலாமென்றுபரிச்சேதநினைக்க லாகாது. மேலும்பொய்‌,சூது,கபடு,வஞ்சனை, கள்ளஞானம்‌,கள்ளப்பத்திரம்‌, திருட்டு, கொலை முதலியதுகள்‌ இவ்வுலகத்திலு மறுலோகத்திலு மாக்கனைக்குரிய பாவங்களாயிருக்கன்‌றமையால்‌ அவைகளையாவரும்‌ விலகக்‌ கபடற நடந்து அந்தப்‌ பாவங்களுக்கு எதிரானசுகிர்த சற்குணங்களை யநுசரிக்கவேணும்‌.

ஆதலா லிக்கதைகளில்‌ நுழைந்திருந்த துர்ப்‌போதனைகளையு மற்றச்சில பிழைகளையுந் திருத்‌த அநேகம்பிரதிகளைப்‌ பரிசோதித்துப்‌ பார்த்‌து இந்‌நூலைச்சுத்தப்பிரதியாக்கியாவர்க்குமுப யோகமாகத்‌ தருகின்றோம்‌. இக்கதைகள்‌ சிறுவர்படிப்புக்கு மிப்போது சொன்னவைக ளவர்களுடைய நல்லொழுக்கத்துக்கு முதவுமென்‌று நம்பிக்கொண் டிருக்கிறோம்

இந்‌நூலி லடங்கிய கதைகள்‌ வெறுங்கட்டுகதைகளென்று புத்திசாலிகள்‌ தாங்களே கண்டுபிடிப்பார்கள்‌. இவைகளில்‌ நாடக மாடுகிறாப்‌ போலக்‌ காட்டியிருக்கற மிருகங்களுக்கு இயல்‌