பக்கம்:பஞ்சதந்திரக் கதை.djvu/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்சதந்திரக்கதை.

வரலாறு

கல்விப்பொருளிலுஞ்‌ செல்வப்பொருளிலுங்‌ குறையில்லாதவர்களுக்‌ குறைவிடமா யிருக்‌கும் பாடலிபுரமென்னு மொருபட்டணமுண்டு. அந்தப்‌ பட்டணத்திற்‌ சகல சுகுணங்களோடுங்‌ கூடியிருக்கிற சுதரிசனனென்னும்‌ -சாசனொருவனிருந்தான்‌. அந்தராசா தன்பிள்ளைகள்‌ படியால்‌ மூடர்களா யிருக்கிறக்கிதைக்கண்டு வெகுசலிப்‌போடும்‌ விசனத்தோடு மாலோசிக்கத்‌ தொடவங்கினான்‌. எப்படியென்றால்‌ - கல்வியுந் தர்மகுணமு மில்லாத பிள்ளைக ளிருந்தாவதென்ன? பால்‌ கொடாத வெருமைகளைக்‌ காப்பாற்றிப்‌ பலனுண்‌டா? வேதசாஸ்‌திர மறிந்தவனா யொரேபிள்ளையிருந்தா லவனாலே குடும்பமெல்லாஞ்‌ சுகமடையும்‌. இப்படிக்‌ கில்லாதபிள்ளைகள்‌ கர்ப்பத்திலே யழிழ்தானாலும்-அழியா விட்டாற்பிறந்தவுடனே யிறந்தானாலு மிறவாவிட்டாற்‌ பெண்ணாவானாலு மில்லாவிட்டாற் பெண்சாதி மலடியாகவானாலும்‌ போகிறது நல்லது. குலத்தி லயோக்கியமான பிள்ளையிருக்கலாகாது. சன்மார்க்க புண்‌-