பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சாயத்து யூனியன் எவ்வாறு இயங்குகி றது! 1. பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அமைப்பது எப்படி? அகில இந்திய ரீதியில் பஞ்சாயத்து சமிதி' என்று வழங்கப்படுகிறது. தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில், பஞ்சாயத்து ஆனியன் மன்றம் ' என்று வழங்கப்படுகிறது: ஆங்கிலத்தில், பஞ்சாயத்து யூனியன் கவுன்வில் ’’ என்று சொல்லப்படுகிறது ! 1958-ம் வருஷத்திய பஞ்சாயத்துச் சட்டம், 7-வது பிரி வின்படி, சமுதாய அபிவிருத்தி தேசீய விஸ்தரிப்புத் திட்ட சேவை ஆகிய காரியங்களுக்காக அமைக்கப்பட்ட தொகுதி எதை வேண்டுமானுலும் பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதி யாக அமைக்கப் போவதாக ஓர் அறிவிப்பு வெளியிடலாம். அத்தகைய பஞ்சாயத்து அபிவிருத்தி பகுதி ஒவ்வொன்றுக்கும் ஒரு பஞ்சாயத்து யூனியனே அமைக்கும்படி கூறியும் அரசாங்கம் அறிவிப்பு வெளியிடலாம். (மற்றும், இதர விவரங்கள் மேற் படி 7-வது பிரிவில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.; 4. பஞ்சாயத்து யூனியன் அங்கத்தினர்கள் யார்? பஞ்சாயத்துச் சட்டம், பிரிவு 12-(1) பிரகாரம், ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்தும், டவுன்ஷிப் கமிட்டியும் தங்களுடைய அங்கத்தினர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து பஞ்சாயத்து யூனியன் கவுன்விலுக்கு அனுப்பவேண்டும். மேற்படி சட்டத்தின் கீழ் அல்லது தற்சமயம் அமுலி லுள்ள வேறு ஏதாவது ஒரு சட்டத்தின்படி, முதன் முறை யாக பஞ்சாயத்து யூனியன் ஒன்றுக்காக அமைக்கப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலில், கிராமப் பஞ்சாயத்து களின் தற்போதைய தலைவர்களும் பஞ்சாயத்து யூனியன்