பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


27. கமிஷனருக்கும் நியமனக் குழுவுக்கும் கருத்து வற்றுமை ஏற்பட்டால் என்ன செய்வது ? நியமனக் குழுவின் அங்கத்தினர்களில் கமிஷனரும் ஒரு வராக இருக்க வேண்டும்; அந்தக் குழுவின் அங்கத்தினர்கள் எல்லோரும் ஆஜராக இருக்க வேண்டும். இந்த இரு சாராரும் அல்லது அங்கத்தினர்கள் எல்லோரும் வந்திருக்கும்பொழுது, வந்திருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கினராவது, தீர் மானத்தில் உடன்பாடு உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அம்மாதிரி இல்லாவிட்டால், நியமனக் குழுவின் முடிவு எது வும் செல்லுபடி ஆகத் தகுந்தது அல்ல. அத்தகைய உடன்பாடு ஏற்படவில்லையானல், கமிஷனர் அந்த விஷயத்தை சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி அவர்களுடைய் உத்தரவின்படி நடந்து கொள்ள வேண்டும். 28. நிர்வாக அறிக்கைகளை யாருக்கு அனுப்புவது? ஒவ்வொரு நிதி வருஷத்திற்கும் உரிய நிர்வாக அறிக் கையைக் க மி ஷ னர் தயாரிக்க வேண்டும். கவுன்சிலில் அதைப் பற்றி ஆலோசனை செய்யப்பட்டபின், கவுன்சிலின் தீர்மானத்தின் நகல் ஒன்றையும் அதளுேடு சேர்த்து கவுன்சில், கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். கலெக்டர், கவுன்சில் களின் நிர்வாகத்தைப்பற்றி ஒரு பொதுவான அறிக்கையை தயாரித்து, அதை ஜில்லா அபிவிருத்தி க ஷ ன் சி லி ன் பார்வைக்கு அனுப்ப வேண்டும். ஜில்லா அபிவிருத்திக் கவுன்சிலின் குறிப்புகளின் நகல் ஒன்றையும் சேர்த்து குறிப் பிடப்பட்ட தேதிக்கு முன்னதாகவே கலெக்டர் இந்த அறிக் கையை அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையின் நகல் ஒன்றைக் கூட்டு அபிவிருத்திக் கமிஷ னருக்கும் அனுப்ப வேண்டும். 29. பஞ்சாயத்து யூனியன் காரியாலய அமைப்பு எப்படி ? வ ட் டார அபிவிருத்தி அலுவலகமும் பஞ்சாயத்து யூனியன் அலுவலகமும் ஒரே கட்டிடத்தில் இருந்துகொண்டு, வட்டார அபிவிருத்தி அதிகாரியின் கீழ் ஒரே அலுவலகமாக இயங்குகின்றன. வட்டார அபிவிருத்தி அதிகாரியே பஞ்சா பத்து யூனியன் கமிஷனரும் ஆவார். ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களின் எண்ணிக்கை பின்வருமாறு: