பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


கமிஷனர், ஒரு பஞ்சாயத்து யூனியன் எந்த உத்தியோகஸ் தரையோ, ஊழியரையோ, எந்த ஒரு பஞ்சாயத்துக் கவுன்சிலின் ஊழியத்திற்கோ அல்லது ராஜ்யத்திலுள்ள எந்த ஒரு முனிசிபாலிட்டிக்கோ மாற்றலாம். ஒரு ஜில்லாவுக்குள்ளே மாறுதல் இருக்குமாளுல் கலெக்டருக்கு மாற்றும் அதிகாரம் உண்டு. 35. அலுவலர்கள் பற்றிய ஏற்பாடுகளை அனு மதிப்பது யார்? ஒழுங்குக் கட்டுபாடு அதிகாரங்களும், கவுன்சில்களின் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தண்டனை விதிக்கும் அதிகாரங்களும் கமிஷனர்களிட்ம் இருக்கின்றன. அப்பீல் செய்து கொள்ளப்பட வேண்டிய அதிகாரி, அபிவிருத்தி கமிஷனர் ஆவார். எந்த ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் அதிகாரி களுக்கும் ஊழியர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய சம்பளங் கள், கட்டணங்கள், அலவன்ஸ்கள், தகுதிகள், பதவிகள், ஆகியவற்றை நிர்ணயம் செய்யவும், மாற்றவும் கூட்டு அபிவிருத்தி கமிஷனரிடம் அரசாங்கம் அதிகாரத்தைக் கொடுத்து வைத்திருக்கிறது. பதவிகளை ஏற்படுத்துதல், ரத்து செய்தல், சம்பளம் அல்லது அலவன்ஸ்களின் திட்டங்களை நிர்ணயித்தல் ஆகிய எல்லாம் தகுந்த அதிகாரம் உள்ள அனுமதியின் பேரில் செய்யப்பட வேண்டும். 36. உத்தியோகஸ்தர்கள், ஊழியர்களின் ஊழிய நிபந்தனைகள் எவ்வாறு ? கமிஷனர்களைத் தவிர, கவுன்சிலின் இதர அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்யும் அதிகாரிகளைப்பற்றி விதிகளை இயற்றவும், அந்த உத்தியோகஸ்தர்கள், மற்றும் ஊழியர்களை வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் முறைகளின் பிரிவு கள்; சம்பளங்கள் மற்றும் அலவன்ஸ்டுகள், ஒழுங்கு நடத்தை, நடவடிக்கை பற்றி விதிகள் இயற்றவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கிறது. பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குக் கமிஷனரைத் தவிர, எந்த வகையான உத்தியோகப் பிரிவுக் கான உத்தியோகஸ் தர்களின் பிரிவை ஊழியர் பிரிவை ஏற். படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கிறது.