பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


துடனும் அதாவது சாக்கடை, வடிகால், வடிகால் திட்டம், சுரங்கப்பாதை அல்லது மதகுகள் ஆகியவை அந்தப் பஞ்சா பத்து யூனியன் கவுன்சிலினிடம் இருக்கும். எந்த ஒரு பஞ்சா யத்து யூனியன் சாலை, சாக்கடை, வடிகால் திட்டம் சுரங்கப் பாதை அல்லது மதகுகள், சட்டத்தின் செயல் முறையிலிருந்து ஒரு அறிவிப்பு மூலம் விலக்கி வைக்கலாம்; மேலும் அத்தகைய அறிவிப்பை மாற்றலாம் அல்லது ரத்து செய்யலாம், 46. பொதுச்சாலைகளையும், சந்தைகளையும் திரு. விழாக்களையும் வகைப்படுத்துவது எப்படி ? ஒரு பஞ்சாயத்து எல்லையில் இருக்கிற பொதுச்சாலைகளே பும், காலந்தோறும் கூடுகிற சந்தைகளையும் நடைபெறுகிற திருவிழாக்களையும் அந்தப் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அல்லது பஞ்சாயத்திற்குச் சொந்தமானது என்று கூட்டு அபி. விருத்திக் கமிஷனர் உத்தரவிட வேண்டும். அவ்வாறு உத்தர விடுவதில் சம்பந்தப்பட்ட ஸ்தல ஸ்தாபனங்களே அவர் கலந்தாலோசிக்க வேண்டும். மேலும் அ வ ர் கலந்து ஆலோசிக்க வேண்டியவர்கள் : நெடுஞ்சாலைகள் விஷயத்தில் கலெக்டரும்; தலைமை எஞ்சினியரும்; ச ந் ைத க ள், திருவிழாக்கள் விஷயத்தில் பொதுச் சுகாதார டைரெக்டர், சம்பந்தப்பட்ட ஜில்லா அபிவிருத்திக் கவுன்சில். இந்த வகைப்படுத்துதலை மாற்றி அமைக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உண்டு. 47. மரங்களை வெட்டினுல் என்ன செய்வது? சாலை ஓரங்களிலும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் எல்லைக்குள் அடங்கிய நிலத்திலும் யாரேனும் திருட்டுத்தன மாக மரங்களை வெட்டினுல், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கிராம முனிசீபு, சம்பந்தப்பட்ட ரெவினியு இன்ஸ்பெக்டர் மூலமாக தாசில்தாருக்கு ரிபோர்ட் செய்ய வேண்டும். அதன் நகல் ஒன்றை கமிஷனருக்கும் அனுப்ப வேண்டும். ரிப்போர்ட் தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் கமிஷனர் அந்த விஷ யத்தில் தாம் எடுத்துக்கொண்ட அல்லது எடுத்துக்கொள்ள உத்தேசித்திருக்கிற நடவடிக்கை பற்றி தாசில்தாருக்கு அறிவிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள், எடுத்துக் கொள்ளப்பட்ட நடவடிக்கைபற்றித் தாசில்தாருக்குத் தெரி விக்கப்படவில்லையானல், தாசில்தார் தாமே அவசியமான நடவடிக்கையை எடுத்துக் கொள்வார். 48. ஸ்தாவர சொத்தை எடுத்துக் கொள்ளுவது எப்படி?