பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125


கட்டணத்தை விதிக்க வேண்டும். இறைத்து பாசனம் பெறும் நிலங்களின்மீது இந்த விகிதத்தில் பாதி அளவுக் கட்டணம் விதிக்க வேண்டும். இப்படி வசூலாகும் தொகை ஒரு தனி நிதியாக வைக்கப்படவேண்டும் ; சம்பந்தப்பட்ட நீர்ப்பாசன வேலைகளுக்கு, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் உசிதம் என்று கருதும் வகையில் பராமரிப்புக்காகவும் பழுது பார்ப்பதற் காகவும் செலவிடப்படவேண்டும் ; வேறு எந்த வேலைக்காக வும் செலவு செய்யப்படக் கூடாது. 73. இஷ்ட பூர்வமான வேலைகளுக்கான மான்யம் எவ்வளவு ? 1963-64 முதல் 1965-66 வரையில் உள்ள ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய் விகிதம் ராஜ்யம் முழுவ திற்கும் உசிதம் என்று கருதும் வேலைகளுக்காக மான்யம் கொடுக்க அரசாங்கம் வகை செய்திருக்கிறது. இந்த வருஷாந் தர மான்யம் பஞ்சாயத்து யூனியன்களுக்கு அரசாங்கத்தால் கால் வருஷத்தவணைகளில் தவணைக்கு ரூ. 7.50 லட்சம்விகிதம் கொடுக்கப்படும். பின்வரும் பகுதிகள் ஒன்று சேர்ந்து இந்த மான்யத்தின் மூலம் கொடுக்கப்படவேண்டிய தொகை ஆகும். இந்தத் தொகையில் ஒரு பஞ்சாயத்து யூனியனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முதல்பகுதி, சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் முந்திய கால் வருஷத்தில் செய்யப்பட்ட ஒவ் வொரு குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷனுக்கும் (ரண கிசிச் சைக்கும்) ரூபாய் 20 வீதம் நிர்ணயம் செய்யப்படும் ; மொத்தத் தொகை ரூபாய் 2000 என்பது அதிக வரம்பு. கால் வருஷத் தவணையின் மொத்தத் தொகையான 7.50 லட்சத்தில் முன் கூறியபடி விநியோகம் செய்தபின், மீதி இருக்கும் தொகையை ராஜ்யத்திலிருக்கும் பஞ்சாயத்து யூனியன்கள் எல்லாவற்றிற்கும் பங் கி ட் டு க் கொடுக்க வேண்டும், உசிதம் எனக்கருதும் (இஷ்டபூர்வமான வேலைகளுக் கான மான்யம் இவ்விதமான வேலைக்கு ஒதுக்கப்பட்டபடி செலவழிக்கப்பட்டாலும் சரி, செலவழிக்கப்படாவிட்டாலும் சரி, அதை முழுவதுமோ அல்லது ஒரு பகுதியையோ அட்டா ரத்தில் எந்த ஒரு பொது வேலைக்கும் உரிய முதலீட்டுச் செலவுக்கும் உபயோகிக்கலாம்.