பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132


(!) தன்னுடைய பிரதேசத்திற்குள் நடத்தப் படுகிற தமாஷ்ாக்களின்மீது ஒரு வரி ; இது 1939 ஆம் வருஷத்து சென்னை தமாஷா வரிச் சட்டம் பிரிவு 4ல் கூறப்பட்டுள்ள விகிதத்தில் இருக்கும். (2) எந்த ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் எல்லைக் குள்ளும் நடைபெறுகிற சினிமாக் காட்சியின்மீது ஒரு காட்சி வரி ; பிரிவு (4) (a)ன்படி அந்தக் காட்சிக்கு விதிக்கிற வரி விகிதத்திற்கு மூன்று மடங்குக்குமேல் இதன் விகிதம் இருக்கக் கூடாது. இந்த இரண்டு வரி விதிப்புகளின் விஷயத்திலும் உண்மை யான விகிதத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு உரியது. இந்தச் சட்டம், விதிக்கப்படக் கூடிய வரியின் மிகவும் உயர்ந்த விகிதத்தைக் கூறுகிறது. 86. பொது மக்கள் பயன்படுத்தும் இடங்கள் பற்றிய சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி ? 1888 ஆம் வருஷத்திய பொதுமக்கள் பயன் படுத்தும் இடங்கள் பற்றிய சட்டத்தின் விதிகளை அரசாங்கம், ஏதாவது ஒரு பஞ்சாயத்துக் கிராமம் அதன் பகுதிக்கு விஸ்தரிக்கும் பொழுது, அந்தச் சட்டத்தின் கீழ் ஒரு லைசென்ஸுக்காகச் செய்யும் விண்ணப்பம் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் கமிஷனருக்குச் செய்து கொள்ளப்பட வேண்டும். அந்த லைசென்ஸைக் கொடுப்பது, மறுப்பது, புதுப்பிப்பது, ரத்துச் செய்வது போன்ற கமிஷனரின் உத்தரவுகளை, மாற்றுவதற்கு அப்பீல் செய்து கொள்ள வேண்டுமானல், பஞ்சாயத்து யூனி யன் கவுன்சிலுக்கு அப்பீல் செய்துகொள்ள வேண்டும். இந்தப் பிரிவின்படி, விதிக்கப்படும் கட்டணத்தின் மூலம், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் வசூலிக்கும் வருமானத்தைச் சம்பந்தப் பட்ட பஞ்சாயத்துகளின் நிதியில் வரவு வைக்க வேண்டும். 87. கணக்குகள் எப்படி வைத்துக் கொள்வது ? ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலும் பின்வரும் நிதிகள் சம்பந்தமாக தனித்தன்யாகக் கணக்குகள் எழுதிவர வேண்டும் : (1) பஞ்சாயத்து யூனியன் (பொது) நிதிகள் ; (2) பஞ்சா புத்து யூனியன் தல்வி நிதிகள்; (3) கிராமப் பஞ்சாயத்து தொகுப்பு நிதி: ) உற்பத்தி நிதி