பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 எந்த ஒரு அதிகாரி அல்லது அதிகாரத்தைக் கொண்டு செய்யலாம். மேலும் தகுதியென்று கருதப்படுகிற உத்தர வுகளை பிறப்பிக்கலாம். 113. அறிவிப்பு அல்லது நோட்டிஸை எப்படி வெளி யிடுவது ? சட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் அல்லது இன்ஸ்பெக்ட ரால் துணை அபிவிருத்தி கமிஷனர் வெளியிடப்படுகிற ஒவ் வொரு அறிவிப்பையும் அரசாங்க கெஜட்டில் வெளியிடப்ப்ட வேண்டும். . . . சட்டத்திலாவது அதன் கீழ் செய்யப்பட்டிருக்கிற விதி. களிலாவது தெளிவாக வேறு விதமாகச் சொல்லப்பட்டிருந் தாலன்றி, அரசாங்கத்தால் அல்லது இன்ஸ்பெக்டரால் துணை அபிவிருத்தி கமிஷனர் அன்றி, வேறு ஒருவரால் வெளியிடப் படும் ஒவ்வொரு அறிவிப்பையும் ஜில்லா கெஜட்டில் பிரசுரம் செய்யப்பட வேண்டும். சட்டத்தின்கீழ், பொது மக்களுக்காக தெரிவிக்கப்படுகிற ஒவ்வொரு அறிவிப்பையும் பின்வரும் விகிதங்களில் வெளி யிடப்பட வேண்டும். அதனுடைய நகல் ஒன்றை குறிப்பிட்ட இடங்களில் நன்கு தெரியும் ஒர் இடத்தில் ஒட்டி வைத்தல் ; பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் காரியாலயத்தில் ; கிராமத்தில் அல்லது நகரத்தில் ஏதேனும் சாவடி இருக்குமானல் அவற்றில் : கிராமத்திலாவது நகரத்திலாவது தண்டோரா போடச் செய்தல். 114. நோட்டீஸை எப்படி சேர்ப்பிப்பது? சட்டத்தின்படி அல்லது அதன் கீழ் செய்யப்பட்டிருக்கிற ஏதாவது விதியின்படி, அல்லது துணை விதியின்படி ஒரு நோட்டீஸ் கொடுப்பது தேவைப்படுமானல், அதை அனுப் பியதற்கான, வழங்கப்பட வேண்டிய முறை : சம்பந்தப்பட்டவருக்கு நோட்டிஸைக் கொடுத்தல் : அவர் காணப்படாவிட்டால், கடைசியாக அவர் வந்த தாகத் தெரிந்துள்ள இடத்தில் அல்லது வியாபாரம் செய்த தாகத் தெரிந்துள்ள இடத்தில் நோட்டீஸை வைத்தல் அல்லது அதை அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த ஒரு வரிடம் சேர்ப்பித்தல் ;