பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 மானுல், ராஜ்ய அரசாங்கம், மத்திய அரசாங்கத்தைக் கலந்து ஆலோசித்து தன்னுடைய அதிகாரத்தை அமுல் நடத்த வெண்டும். - 119. துணை விதிகள் (பைலாக்கள் எதற்காக ? சட்டத்தின் விதிகளுக்கு அடங்கியும், மற்றும் வேறு எந்த ஒரு சட்டத்திற்கு அடங்கியும், இன்ஸ்பெக்டரின் துணை அபி விருத்தி கமிஷனர் அங்கீகாரத்துடன் சட்டத்தின் நோக்கங் களில் எவற்றையேனும் நிறைவேற்றும் பொருட்டு, ஒரு பஞ்சா யத்து யூனியன் கவுன்சில், துணை விதிகளைச் செய்யலாம். ஒரு துணை விதியைச் செய்யும்பொழுது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலானது, மேற்படி துணை விதியை மீறுகிற யாராவது ஒருவர், கவுன்சில் நிர்ணயம் செய்கிற ஒரு தொகையை, அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று விதி ஏற்படுத்த வேண்டும். இந்த அபராதத்தொகை பதினைந்து ரூபாய்க்கு மேல் போகக் கூடாது. அம்மாதிரி தொடர்ந்து மீறிக்கொண்டே இருப்பாரானல், முதல் தடனை மீறி நடந்த தற்காக அபராதம் விதிக்கப்பட்ட பிறகு, தொடர்ந்து ஏற்படும் ஒவ்வொரு நாளுக்கும், ஐந்து ரூபாய்க்கு மேற்படாத தொகையை அவர் அபராதமாகச் செலுத்த வேண்டும். பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் துணை விதிகளைச் செய் வதற்கு அல்லது மாற்றுவதற்கு முன்பு, செய்ய உத்தேசித் திருக்கிற துனே விதிகள் அல்லது மாறுதல்களின் எழுத்து மூலமான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். அதனோடு கூட அந்த அறிக்கை எந்த தேதியில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் அல்லது எந்த தேதிக்குப் பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று ஒரு நோட்டீஸ் கொடுக்கப் பட வேண்டும். இந்த நோட்டீஸ், இதற்கு 30 நாட்கள் முற். பட்டதாக இருக்க வேண்டும். துணை விதிகளை அல்லது மாறுதல்களைச் செய்வதற்குமுன் ஏதாவது ஆட்சேபணைகள் கூறப்படுமானலும், ஆலோசனை கள் கூறப்படுமானலும் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். துணை விதிகளும் மாறுதல்களும் முறைப்படி உறுதி செய்யப்பட்டு சம்மதம் தெரிவிக்கப்பட்ட பிறகு, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் காரியாலயத்தில் வைக்கப்பட வேண்டும். துணை விதிகளின் நகல் ஒன்றை, பஞ்சாயத்து யூனியன் காரியாலயத்தின் அறிவிப்பு பலகையிலும், பஞ்சா பத்து யூனியன் கவுன்சில் உத்தரவிடும் முக்கிய இடங்களிலும்