பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“..... நம் கிராம மக்களுடைய வாழ்க்கைத் தரம் நன்றாக வளர்வதற்காக அமைக்கப்பட்ட ஸ்தாபனம் பஞ்சாயத்து. அதனுடைய முன்னேற்றம் தான் நம்முடைய முன்னேற்றம் என்று கருத வேண்டும். அந்த மனப்பான்மைதான் நமக்கு ஏற்பட வேண்டும். மேற்பார்வை செய்யும் அதிகாரம், ஜனநாயகத்தில் இருந்துதான் ஆகவேண்டும். வேறு வழி இல்லை. உதாரணமாக ஒரு கோர்ட் இருக்கிறது என்று சொன்னால், முன்சீப் கோர்ட், அதற்குமேல் ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று மேலே இருக்கிறது அல்லவா? அது மாதிரித்தான் மேல் அதிகாரியும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அதனால் மேற்பார்வை அதிகாரிகள் சரியாக நடக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களும் மனிதர்கள்தானே. அவர்களும் தப்புகள் செய்யலாம். இருந்தாலும் ஜனநாயகத்தில் தவறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மக்கள் கடமை......”

–காமராஜ் [1962]