பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 தேர்ந்தெடுக்கப்பட்டதாக், அறிவிக்கப்படுகிற அபேட்ச கர்களின் டெபாஸிட் தொகைகளே அவர்களிடமோ அல்லது அவர்களுடைய அதிகாரம் பெற்றவர்களிடமோ உடனே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். - - - - ஒரு அபேட்சகருக்கு கிடைத்த, செல்லுபடியான வாக்கு களின் எண்ணிக்கை, அந்த வார்டில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளின் மொத்த எண்ணிக்கையூை, தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நபர்களின் எண்ணிக்கையால் வகுத்து வருவதில், நான்கில் ஒரு பகுதிக்கு குறையாமில் இருந்தால், அத்தகைய அபேட்சகரின் .ெ ட பா ஸி ட் தொகையை, அவரிடமோ அல்லது அவருடைய அதிகாரம் பெற்றவரிடமோ வார்டுகளின் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். ஒரு அபேட்சகர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்து அவருக்குக் கி ைட த் த செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை, அந்த வார்டில் அளிக்கப்பட்ட வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை, தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நபர்களின் மொத்த எண்ணிக்கையால் வகுத்து வருவதில், நான்கில் ஒரு பகுதிக்குக் குறைவாக இருந்தால், அவருடைய டெபாஸிட் தொகை பறிமுதல் ஆகிவிடும். மேற்படி தொகை, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தைச் சேர்ந்தது. - 7. ஒரு வார்டில் தேர்தல் நடவடிக்கை முடிவடைதல் ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரி ஒருவரின் கீழ் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வார்டுகள் சம்பந்தமாக தேர்தல் நடத்தப்பட்டால், ஒரு வார்டு சம்பந்தமான தேர்தல் விஷயமாக, 9 முதல் 19 வரையிலுள்ள விதிகளின்படி (10-வது விதி நீங்கலாக) நடவடிக்கைகள், மற்ருெரு வார்டு சம்பந்தப்பட்ட தேர்தல் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பே முடிந்துவிட வேண்டும். 8. நியமனச் சீட்டுகளைப் பரிசீலனை செய்தல் நியமனச் சீட்டுகளே, ஒட்டுச்சாவடி தலைமை. யானவர் பெற்றுக் கொண்டபிறகு, தாமாகவோ, ידייל வந்துள்ள வாக்காளர்களில் யா ேர னு ம் ஆட்சேபனை கிளப்பியதன் பேரில், கீழ்க்கண்டி காரணங்களில் ஏதாவது ஒன்றுக்காக சம்பந்தப்பட்ட அபேட்சகரின் நியமனச் சீட்ட்ை நிராகரிக்கலாம்.