பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j9 23. இந்த விதிகளுக்கு அரசாங்கம் விளக்கம் கொள்வது ஒரு தேர்தலின் செல்லுபடி பற்றிய தகராறுகளைத் தீர்ப்ப தற்கு உரிய விதிகளின்படி, நடந்த ஒரு விசாரணை சம்பந்த மாக அல்லாமல் மற்றபடி இந்த விதிகளின் விளக்கம் குறித்து, பிரச்னே ஏதாவது எழுந்தால், அதை அரசாங்கத் துக்கு அனுப்பவேண்டும். அதுபற்றி அவர்களுடைய முடிவே இறுதியானதாகும். அம்மாதிரி பிரச்னேகள்மீது அரசாங்கத்தின் முடிவு தெரிவிக்கப்படுகிற வரையில், அல்லது இந்த விதிகளே மீறி ஒரு தேர்தல் நடந்து வருவதாக அல்லது நடக்க இருப்பதாக, தகவல் கிடைப்பதன்மீது அரசாங்கம் நடத்தக்கூடிய ஒரு விசாரணையின்மீது, முடிவான உத்திரவு பிறப்பிக்கப்படுகிற வரையில், தேர்தல் முடிவுகளே அறிவிப்பதற்கு முன் தேர்தல் நடவடிக்கைகளே எந்தக் கட்டத்திலாவது நிறுத்திவைக்கி வேண்டும் என்று அரசாங்கம் கட்டளையிடலாம். இந்த விதியின்கீழ் அரசாங்க உத்திரவை மீறி நடந்த அல்லது நடத்திக்கொண்டுபோன ஒரு தேர்தல் செல்லுபடியாகாது. அரசாங்கம், மற்றபடி உத்திரவிட்டால் ஒழிய, இந்த விதியின்படி நிறுத்தி வைக்கப்பட்ட தேர்தல் நடவடிக்கை கள், அந்தத் தடை உத்திரவு ரத்து செய்யப்படுவதன்மீது, மேற்படி நடவடிக்கைகள் எந்தக் கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதோ அந்தக் கட்டத்திலிருந்து நிச்சயிக்கப் படக் கூடிய புதிய தேதிகளில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். 24. விசேஷ காரணங்களை முன்னிட்டு தேர்தலுக்காக மற்ற தேதிகளைத் தீர்மானித்தல் முன்னர் கூறியுள்ள விதிகளில் ஏதாவது ஒன்றுக்குப் பாதகம் இல்லாமல் அரசாங்கம், இந்தச் சட்டத்தின்படி நடக்கும் தேர்தலின் நிலைகள் எல்லாவற்றிற்கும் விசேஷ் காரணங்களே முன்னிட்டு, இந்த விதிகளில்ை, நிச்சயிக்கப் பட்ட தேதிகள், நேரங்கள் அல்லாத மற்ற தேதிகள் அல்லது நேரங்களே தீர்மானிக்கும் அதிகாரத்தை எலக்ஷன் அதா ரிட்டி அளிக்கலாம்.