பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இடது கையின் அல்லது வலது கையின் கீழ்முனே என்றும் அர்த்தம் கொள்ள வேண்டும். 22. வாக்குச் சீட்டுகள் (1) ஒவ்வொரு வாக்குச் சீட்டும் 4-வது நமூனுப்புடி இருக்கவேண்டும். சின்னங்கள் மட்டுமே வாக்குச் சீட்டில் அச்சிடப்பட வேண்டும். வாக்குச் சீட்டின் வடிவமும் அது சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களும் எலக்ஷன் அத்தாரிட்டி யால் அவ்வப்போது தீர்மானிக்கப்படும் (2) வாக்குச் சீட்டுகளில் வரிசையாக எண் போடப்பட வேண்டும். மேலும் எலக்ஷன் அத்தாரிட்டி கட்டளையிடக் கூடிய வீதத்தில் வாக்குச்சீட்டின் பின்புறத்தில் பிரத்தியேக அடையாளம் ஒன்றை முத்திரையிட வேண்டும். 28. வாக்குச் சீட்டை வழங்குதல்; வாக்களிப்பதற்கான நடைமுறை (1) ஒரு வாக்காளருக்கு வாக்குச்சீட்டை வழங்கு வதற்கு முன்பு ஒட்டுச்சாவடி அலுவலர் வாக்குச் சீட்டின் வரிசை எண்ணே (இதில், பின்னல் வாக்குச் சீட்டை வாக்காளருக்குக் கொடுத்ததை அறிவிக்கும் அடையாளம் பெற்றுள்ள வாக்காளர் ஜாபிதாவின் பிரதி என்று குறிப்பிடப் படுகிற) வாக்காளர் ஜாபிதாவின் பிரதியில் மேற்படி வாக்காளர் சம்பந்தப்படுகிற பதிவுக்கு எதிரே பதிவு செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் வாக்குச் சீட்டைப் பெற்றுக்கொண்டார் என்பதை அதன்மூலம் குறித்துக் கொள்வது சாத்தியமாகிறது. - (2) ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்குச் சீட்டுத் தான் கொடுக்கப்படும். வாக்குச் சீட்டைப் பெற்றுக் கொண்டதும் வாக்களிக்கும் அறைக்குள் சென்று அங்கே வைக்கப்பட்டுள்ள சாதனத்தின் உதவியால் தான் வாக்களிக்க விரும்பும் அபேட்சகருடைய சின்னத்துக்கு எதிரே வாக்குச் சீட்டில் அடையாளம் இட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட அபேட்சகர்களே தேர்ந்தெடுக்க வேண்டுமானல், தேர்ந் தெடுக்கப்பட வேண்டிய அபேட்சகர்களின் எண்ணிக்கைக் கேற்ப பல அடையாளங்கள் இடலாம். ஆல்ை ஒவ்வொரு அபேட்சகருடைய சின்னத்துக்கு எதிரே ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்களைப் போடக்கூடாது. பிறகு, அவர் தன்னு டைய வாக்கு ரகசியமாக இருக்கும் பொருட்டு வாக்குச் சீட்டை மடித்து, அதன் பின்புறம் முத்திரையிட்டுள்ள