பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 (2) தேர்தல் அலுவல் பார்க்கும் ஒரு வாக்காளர் எந்த ஒட்டுச் சாவடியில் தேர்தல் வேலைக்கு நியமிக்கப்பட்டிருக் கிருரோ அந்த ஒட்டுச் சாவடியின் அலுவலருக்கு அந்த வாக்காளரின் வாக்குச் சீட்டு அனுப்பப்பட்டிருந்து, அந்த வாக்குச்சீட்டு வேண்டும் என மேற்படி வாக்காளர் விண்ணப் பித்துக் கொண்டால், ஒட்டுச் சாவடி அலுவலர் அந்த வாக்காளர் இன்னர் என்று சந்தேகமின்றி தெரிந்துகொண்டு 23-வது விதியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நடைமுறையை அனுசரித்த பிறகு சம்பந்தப்பட்ட வாக்குச் சீட்டை அந்த வாக்காளரிடம் கொடுக்க வேண்டும். (3) வாக்காளர் வாக்குச் சீட்டைப் பெற்றுக் கொண்ட வுடன் வாக்குப்பதிவு செய்யும் அறைக்குள் சென்று, தான் விரும்புகிற அபேட்சகரின் சின்னத்துக்கு எதிரில் அடை யாளம் இடம் வேண்டும். அதன் பிறகு, இதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் உறை ஒன்றில் வாக்குச் சீட்டைப் போட்டு, உ ைற ைய ஒட்டி அதனை ஒட்டுச்சாவடி அலுவலரிடம் கொடுக்க வேண்டும். அலுவலர் இந்த உறையை வாக்காளருக்கு கொடுக்கப்பட்டுள்ள சான்று இதழுடன், இதற்காக கொடுக்கப்பட்டுள்ள பெரிய உறையில் போட வேண்டும். வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் அவர், அந்த உறைகளே ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக வைத்து 31-வது விதியில் சொல்லியுள்ளபடி முத்திரையிட்டு மூடவேண்டும். மேலும் அவற்றை அந்த விதியில் சொல்லி யுள்ள இதர கட்டுகளுடன் அனுப்ப வேண்டும். 25. பார்வை இழந்தவர், அங்க ஹீனமான வாக்காளர்கள் வாக்கைப் பதிவு செய்தல் (1) வயது முதிர்ந்த காரணத்தினலோ பார்வை இல்லாததனுலோ அல்லது அங்கஹlனம் காரணமாகவோ ஒரு வாக்காளர் வாக்குச் சீட்டில் குறியிட முடியவில்லே என்ருல், ஒட்டுச்சாவடி அலுவலர், அந்த வாக்காளரின் விருப்பப்படி வாக்குச் சீட்டில் பதிந்து, அதை நன்கு மடித்து வாக்குப் பெட்டியில் போடவேண்டும். (2) இந்த விதியின் கீழ் அவ்வாறு செய்யும்போது ஒட்டுச்சாவடி அலுவலர் இதைக் கூடியவரை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அம்மாதிரியான ஒவ்வொரு நிகழ்ச்சியைக் குறித்தும் சுருக்கமாக குறிப்பு எழுதி வைத்துக் கொள்ளவேண்டும். ஆல்ை, அதில் எந்த முறையில் வாக்களிக்கப்பட்டது என்பதை எழுதி வைக்கக்கூடாது.