பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 தினுல் வாக்கெடுப்பு நடத்த முடியாவிட்டால், அத்தகைய ஒட்டுசாவடி அலுவலர், எலக்ஷன் அத்தாரிட்டியிடமிருந்து உத்தரவு வரும்வரையில் வாக்கெடுப்பை நிறுத்தி வைக்கலாம். வாக்கெடுப்பு நிறுத்தப்பட்ட விஷயத்தை உடனடியாக ஒட்டுச்சாவடி அலுவலர், அங்கே வந்திருக்கும் நபர்களிடம் அறிவிக்க வேண்டும். (2) ஒட்டுச்சாவடி அலுவலர், துனே விதி (1)ன்படி வாக்கெடுப்பை நிறுத்தும் விஷயத்தில், அவர் 31-வது விதியில் நிர்ணயித்துள்ள நடைமுறையை அனுசரித்து வாக்கெடுப்பை நிறுத்துவதற்குக் காரணமாக இருந்த சூழ் நிலைகளே, தேர்தல் அதிகாரிக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். தேர்தல் அதிகாரியானவர் எலக்ஷன் அத்தா ரிட்டிக்குத் தெரியப்படுத்துவார். அந்த வாக்கெடுப்பு முடி வடையும் வரையில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளே எண்ணக்கூடாது. (3) எலக்ஷன் அத்தாரிட்டி அதன்பிறகு (அ) முந்திய வாக்கெடுப்பில் எத்தனே மணி நேரத் துக்கு வாக்கெடுப்பு தடைப்பட்டிருந்ததோ அத்தனை மணி நேரத்துக்கு ஒட்டுச் சாவடியில் வாக்கெடுப்பு மீண்டும் நடைபெறலாம் என்று; அல்லது, (ஆ) அந்தச் சாவடியில் நடைபெற்ற வாக்கெடுப்பை புறக்கணித்து விடலாம். என்றும் அந்தச் சாவடியில் முன்பு எத்தனே மணி நேரத்துக்கு வாக்கெடுப்பு நடை பெற்றிருக்க வேண்டுமோ அத்தனை மணி நேரத்துக்கு வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்று கட்டளையிடலாம். இந்தத் துணை விதியின்படி பிறப்பித்த உத்திரவு இறுதியானதாகும். (4) துணே விதி (8)ன் படி பிறப்பித்த உத்திரவு ஒன்றில்- - (அ), () எந்தத் தேதியில், எந்த நேரங்களுக்கிடையே மறு வாக்கெடுப்பு அல்லது புது வாக்கெடுப்பு நடைபெறும் எனவும், (11) எந்தத் தேதியில், எந்த இடத்தில், எந்த நேரங் களிடையே தேர்தல் அதிகாரி, 33-வது விதியின் படி வாக்குகளே எண்ணத் தொடங்குவார் எனவும் கண்டிருக்க வேண்டும்.