பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 (அ) வார்டின் எண் ; (ஆ) மேற்படி வாக்குச் சீட்டுகள் உபயோகிக்கப்பட்ட ஒட்டுச் சாவடி பற்றிய விவரங்கள்; (இ) வாக்குகள் எண்ணிய தேதி, 88. வாக்குகளே மறுபடியும் எண்ணுதல் (1) வாக்குகளே எண்ணி முடிந்ததும், தேர்தல் முடிவு அறிவிக்கப்படு முன்னர், ஒரு அபேட்சகர் அல்லது அவர் இல்லாதபோது வாக்குகளே எண்ணும் இட ஏஜண்ட், ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குச் சீட்டுகள் அனேத்தையும் அல்லது ஏதாவது ஒரு பகுதியை மறுபடியும் எண்ணும்படி தேர்தல் அதிகாரிக்கு எழுத்து மூலமான விண்ணப்பம் செய்து கொள்ளலாம். அவ்வாறு மறுபடியும் எண்ணுவதற்காக அவர் விண்ணப்பிப்பதற்கான காரணங்களேயும் தெரிவிக்க வேண்டும். - - (2) அத்தகைய விண்ணப்பம் செய்து கொண்ட பின்னர், தேர்தல் அதிகாரியானவர் மேற்படி விஷயத்தைக் குறித்து தீர்மானித்து, விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள வேண்டுகோள் முழுவதையும் அல்லது ஒரு பகுதியை அனுமதிக்கலாம். அல்லது அ ற் ப ம | ன காரணத்திற் காகவோ அல்லது நியாயமற்ற முறையிலோ விண்ணப்பஞ் செய்திருக்கிருர் என்று அவருக்குத் தோன்றினால் அதை முழுவதும் நிராகரித்து விடலாம். (3) தேர்தல் அதிகாரி (2) துணை விதியின்படி செய்யும் ஒவ்வொரு முடிவையும் எழுதி வைக்க வேண்டும். அதற்கான காரணங்களேயும் குறிப்பிட வேண்டும். - (4) தேர்தல் அதிகாரி (2) துணை விதியின்படி, விண்ணப்பத்தின் ஒரு பகுதியை அல்லது முழுவதையும் அனுமதிப்பது என்று தீர்மானித்தால் கீழ்க்கண்டபடி செய்ய வேண்டும். (அ) தமது முடிவை அனுசரித்து வாக்குச் சீட்டுகளே மறுபடியும் எண்ண வேண்டும். (ஆ) அவ்வாறு மீண்டும் எண்ணிய பிறகு 10-வது நமூனுப்படியுள்ள முடிவுத்தாளில் அவசியமான அளவுக்கு திருத்த வேண்டும்.