பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{}{} (அ) மாவட்ட அபிவிருத்தி டின்றத்திற்கு அங்கத் னராக தேர்ந்தெடுப்பதற்கு அபேட்சகர்களின் நியமனங் கள்ே அனுப்புமாறு கேட்கலாம்; (ஆ) அந்தப் பகுதியிலுள்ள எல்லாப் பஞ்சாயத்து தலைவர்களேயும் மேற்படி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நேரத் திலும் முறையிலும் அந்தத் தேதியன்று கூட வேண்டும் என்று கேட்கலாம். - - (3) மேற்படி பகுதியில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து அலுவலகத்திலும் மேற்படி அறிவிப்பின் நகல் ஒட்டி வைக்கப்பட வேண்டும். மேலும் மேற்படி பகுதியிலுள்ள ஒவ்வொரு பஞ்சாயத்தின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் பகுதியில் இரண்டுக்குக் குறையாத முக்கியமான இடங்களில் அந்த அறிவிப்பை ஒட்டி வைக்க வேண்டும். மேற்படி பகுதியில் தண்டோரா மூலமும் அந்த அறிவிப்பைத் தெரி விக்கலாம். (4) துணே விதி (1)-ல் குறிப்பிட்டுள்ள கூட்டத்திற்கு தேர்தல் அலுவலர் தலேமை வகிப்பார் . 3. ஒவ்வொரு அபேட்சகரும் எழுத்துமூலமாய் நியமனம் செய்யப்பட வேண்டும், நியமனச் சீட்டில், பிரேரேபிப்பவ ராகவும் ஆமோதிப்பவராகவும் இரண்டு பஞ்சாயத்து தலைவர்கள் கையொப்பம் இடவேண்டும். பிரேரேபிப்பவர், ஒரு அபேட்சகரின் பெயரை பிரேரேயிக்கும்போது ஒரு உறுதிமொழியை தேர்தல் அலுவலருக்குக் கொடுக்க வேண்டும். மாவட்ட அபிவிருத்தி மன்ற அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட அபேட்சகர் விரும்புவதாக எழுத்து மூலம் அந்த உறுதிமொழியில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதில் அபேட்சகரும், பிரேரேபிப்பவரும் ஆமோதிப்பவரும் கையொப்பமிட வேண்டும். 4. தேர்தல் அலுவலர் தாமாகவே அல்லது கூட்டத் துக்கு வந்திருக்கும் பஞ்சாயத்து தலைவர்களில் யாராவது ஒருவர் ஆட்சேபித்தால் கீழ்க்கண்ட காரணங்கள் ஏதாவது ஒன்றினுல் அபேட்சகரின் நியமனத்தை நிராகரிக்கலாம் : (i) அந்த அபேட்சகரானவர் ஒரு கிராமத் தலைவர், கர்ணம், அல்லது கிராம ஊழியர், அல்லது மாநில அல்லது மத்திய அரசாங்க அலுவலர் அல்லது ஊழியர் அல்லது ஒரு பஞ்சாயத்து யூனியன் மன்றம், நகரசபை அல்லது சென்னைக்