பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22 10. ஒரு பஞ்சாயத்தில் இருக்க வேண்டிய அங்கத்தினர்களின் எண்ணிக்கை, (1) ஒரு பஞ்சாயத்தில் இருக்க வேண்டிய அங்கத் தினர்களின் எண்ணிக்கையை, ஜனத்தொகைக்கு ஏற்ப இன்ஸ்பெக்டர் அறிவிப்பு வெளியிடுவார். - (2) உட்பிரிவு (1)ன்படி வெளியிடப்படும் அறிவிப்பில் காணப்படும் எண்ணிக்கையை இன்ஸ்பெக்டர் அப்போதைக் கப்போது மாற்றி அமைக்கலாம். (3) உட்பிரிவு (1), (2)ன் படி குறிப்பிடப்படும் அங்கத் தினர்களின் எண்ணிக்கை ஐந்துக்கு குறைவாயிருக்கக் கூடாது; பதினேந்துக்கு மேல் போகக்கூடாது. 11. பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களை அமைத்தல். (1) பஞ்சாயத்து யூனியன் ஒவ்வொன்றுக்கும் பஞ்சா யத்து யூனியன் கவுன்சில் ஒன்று அமைக்கப்படும். கவுன்சில் அமைக்கப்படும் தேதியைக் குறிப்பிட்டு அரசாங்கம் அறிவிப்பு வெளியிட வேண்டும். (2) பஞ்சாயத்து யூனியன் நிர்வாகம் முழுவதும் இந்தக் கவுன்சிலிடம் ஒப்புவிக்கப்படும். இந்தச் சட்டத்தின் பிரிவு களுக்கு உட்பட்டு மேற்படி கவுன்சிலின் நிர்வாகம் நடை பெறும். இச்சட்டத்தின்படியோ அல்லது வேறு எந்தச் சட்டத்தின்படியோ இது தலேவருக்குள்ள அதிகாரம், இது கமிஷனருக்குள்ள அதிகாரம் என்று வெளிப்படையாக வரை யறுக்கப்பட்டுள்ள அதிகாரங்களில் மேற்படி கவுன்சிலோ அல்லது பஞ்சாயத்தோ தலையிடுதல் கூடாது. எனினும், பஞ்சாயத்து யூனியன் அதிகார வரம்புக்கு உட் பட்ட பகுதிகளில் எங்கேயாவது பஞ்சாயத்து இல்லாவிட் டால், அப்பகுதியில் வரிவிதிப்பது உள்பட சகல அதிகாரங் களேயும் செலுத்தலாம். அதேமாதிரி வரி கொடுப்போருக்குச் செய்ய வேண்டிய கடமைகளேயும் பொறுப்புகளேயும் நிறைவேற்றலாம். வரவேண்டியவற்றை வசூல் செய்யலாம்; செலுத்த வேண்டியவற்றை செலுத்தவும் உரிமை உண்டு. பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் தலைவரும், கமிஷனரும், பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியின் அத்தகைய பகுதியில் முறையே தலைவருக்கு உள்ள அதிகாரங்களேயும், நிர்வாக அதிகாரிக்கு உள்ள அதிகாரங்களேச் செலுத்தவும் கடமை களேச் செய்யவும், அலுவல்களே நிறைவேற்றவும் வேண்டும்.