பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 (3) கூட்டத்திலே ஒழுங்கு அமைதியைக் காப்பதுடன் கூட்டங்களின் போதும் அவை சம்பந்தமாகவும் எழும் எல்லா ஒழுங்குப் பிரச்னைகளைப்பற்றியும் திர்ப்பு அளிக்க வேண்டும். ஒழுங்குப் பிரச்னைமீது விவாதம் செய்யக் கூடாது. ஒழுங்குப் பிரச்னை மீது தலைவர் அளிக்கும் தீர்ப்பே முடிவானது. (4) துணைத் தலைவர் அல்லது அப்பொழுது கூட்டத் துக்குத் தலைமை வகிக்கும் அங்கத்தினருக்கு அந்தக் கூட்டம் முடிவடைகிற வரையில் தலைவருக்கு உள்ள எல்லா அதிகாரங் களும் உண்டு. 48. விவாதத்திலும், ஓட் எடுப்பிலும் அங்கத்தினர்கள் கலந்து கொள்ள முடியாத சந்தர்ப்பங்கள் (1) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது அவற்றின் கமிட்டிக் கூட்டங்களில் பரிசீல னே க்கு வரும் விஷயங்கள், பொதுமக்களுக்கு அதனல் ஏற்படும் நன்மை தீமையைத் தவிர்த்து, ஒரு அங்கத்தின ருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பணத் தொடர் புடைய பாத்தியதை இருக்கக்கூடியதாக இருந்தால் அவர் அந்த விவாதத்தில் கலந்து கொள்ளவோ, ஒட் அளிக்கவோ . .lتي rسسة معك (2) விவாதிக்கப்படும் ஒரு விஷயத்தில் எந்த ஒரு அங்கத்தினருக்கு நேரடியான தொடர்பு இருக்கிறது என்று தலைவர் அல்லது சேர்மன் கருதினால், அந்த அங்கத்தினர் அந்தப் பிரச்னே மீது ஒட் செய்யக் கூடாது என்றும், விவா தத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் தடை விதிக் கலாம் அல்லது அந்த விவாதத்தின்போது அவரை சபைக்கு வரக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளலாம். (3) அந்த அங்கத்தினர், சேர்மன் அல்லது தலைவ ருடைய தீர்ப்பை ஆட்சேபிக்கலாம். அதன்பேரில், அவர் அந்தப் பிரச்னேயை சபையினருக்குத் தெரிவிக்க வேண்டும். சபை செய்யும் முடிவு முடிவானது. (4) விவாதிக்கப்படும் பிரச்னையில் தலைவருக்கு அல்லது சேர்மனுக்கு பணத் தொடர்புடைய பாத்தியதை இருப்பதாக அங்கத்தினர் யாராவது கருதினால், அவர் ஒரு பிரேரணை கொண்டு வந்து அதுவும் நிறைவேற்றப்பட்டால், அவர்ை விவாதத்தின்போது சபையில் இருக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படலாம். -