பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 மார்க்கட் நடத்தவும் கட்டணங்கள் வசூலிக்கவும் தனி நபருக்குள்ள உரிமை பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குச் சேர்ந்ததாகி விடும். 106. பொதுவான இறங்குமிடங்கள், வண்டிப் பேட்டைகள் முதலியன. நிர்ணயிக்கப்படும் விதிகளுக்கு உட்பட்டு பஞ்சாயத் தானது - (a) பொதுவான இறங்குமிடங்களேயும் தங்கும் இடங் களேயும் வண்டிப் பேட்டைகளேயும் (இந்தச் சொல்லானது, எல்லா வகையான பிராணிகளேயும் மோட்டார் உள்பட எல்லா வகையான வாகனங்களேயும் குறிக்கும்) ஏற்படுத்தி அவற்றை உபயோகிப்பதற்குக் கட்டணங்கள் விதிக்கலாம். இப்படிப்பட்ட இடம் அல்லது பேட்டை ஏற்படுத்தப்பட் டிருக்கும்போது இன்ஸ்பெக்டரின் கட்டுப்பாடுகளுக்கு உட் பட்டு பஞ்சாயத்து குறிப்பிடக்கூடிய தூரத்துக்குள் ஏதாவது ஒரு பொது இடத்தையோ அல்லது பொதுச் சாலேயின் ஓரங் களேயோ யார் உபயோகப்படுத்தினாலும் தடை செய்யலாம். 107. சொந்தமான வண்டிப் பேட்டைகள் (1) பஞ்சாயத்திடம் லேசென்ஸ் பெற்றிருந்தாலன்றி யாரும் சொந்தமாக வண்டிப் பேட்டைகளே ஏற்படுத்தவோ, ஏற்கனவே இருந்ததை தொடர்ந்து நீடிக்கவோ கூடாது. இந்த லேசென்ஸ் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள் ளப்பட வேண்டும். (2) ஏற்கனவே, சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்டுள்ள சொந்த வண்டிப்பேட்டைகளைப் பொறுத்தவரை விண்ணப் பித்துக் கொண்டதும் பஞ்சாயத்து லேசென்ஸ் வழங்க வேண்டும்; புது வண்டிப் பேட்டைகளே பொறுத்தவரை பஞ்சாயத்தானது உ சி த ம் .ே ப ல் விண்ணப்பித்ததும் லேசென்ஸ் வழங்கலாம். இந்த லேசென்லானது மேற் பார்வைக்கும், கண்காணிப்புக்கும் சுகாதாரம் முதலான விஷயங்களுக்கும் பஞ்சாயத்து நிர்ணயிக்கிறபடி வழங்கப்பட வேண்டும்; புது வண்டிப் பேட்டைகளுக்கு அத்தகைய லேசென்ஸ் வழங்க மறுக்கலாம். (3) பஞ்சாயத்தானது, லே சென் ஸ் நிபந்தனைகளே மாற்றி, குறிப்பிட்ட தேதி முதல் அமுலுக்கு வரவும் செய்யலாம்.