பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 (4) அரசாங்கம் கீழ்க்கண்டவை குறித்து விதிகள் செய்யலாம் (i) வரி விதிப்பு விஷயங்களுக்காக, வீடுகளின் வரு ஷாந்திர வருமானம் அல்லது மூலதன மதிப்பைக் கணக்கிடும் முறை அல்லது அந்த வீடு எந்த வரி விதிப்பு இனத்தில் அடிங்கி இருக்கிறது என்பதைப் பற்றி; (ii) வரி செலுத்த வேண்டிய ந பர் க ள் யார் எனபதையும் வீடுகள் மாற்றங்களேக் குறித்து நோட்டீஸ்கள் கொடுப்பது பற்றி; (iii) காலியாக இருப்பது காரணமாகவும் அல்ல்து வேறு காரியங்களுக்காக வரி வஜா செய்வது பற்றி; (iv) பிரஸ்தாப வருஷத்தில் மேற்படி கிராமத்தில் அல்லது நகரத்தில் கட்டப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட அல்லது இடித்துத் தள்ளப்பட்ட வீடுகளுக்கு அல்லது அந்தக் கிராமத் தில் அல்லது நகரத்தில் சேர்க்கப்பட்ட அல்லது விலக்கப் பட்ட பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு மேற்படி வரி முழுவதுமோ அல்லது அதன் ஒரு பகுதியோ பயன்படும் அல்லது பயனற்றுப் போகும் சந்தர்ப்பங்களும் நிபந்தனை களும் பற்றி. (5) ஒரு வீட்டில் குடியிருப்பவர் வீட்டுச் சொந்தக்கார ருடைய சார்பில் வீட்டு வரியைச் செலுத்தினுல், கட்டிய தொகையை, சொந்தக்காரரிடமிருந்து பெறக் கடமைப் பட்டவர். அவர் வீட்டுச் சொந்தக்காரருக்கு அப்போதோ அல்லது அதற்குப் பிறகோ கொடுக்க வேண்டிய வாடகை யிலிருந்து கழித்துக் கொள்ளலாம். 121. தொழில் வரி (1) நிர்ணயிக்கப்படும் விதிகளுக்கு இணங்க,ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது நகரத்திலும் ஒவ்வொரு அரை வருஷத்துக்கும் தொழில் வரி விதிக்க வேண்டும். (i) அந்த அரை வருஷத்தில், மொத்தம் அறுபது தினங்களுக்கு குறையாமல் கிராமத்தில் அல்லது நகரத்தில் தொழில் நடத்தி வருகிற ஒவ்வொரு கம்பெனிக்கும்;