பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202. 128. பஞ்சாயத்துகளுக்கு வரவேண்டிய வரிகள் கட்டணங்களை வசூலித்து தருமாறு ரெவின்யூ இலாகா சிப்பங்கிகளே கேட்டுக் கொள்வதற்கான அதிகாரம் நிர்ணயிக்கப்படும் விதிகளுக்கு ஏற்ப, நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனருக்கு, ஐந்தாண்டுக்கு ஒரு முறை வீட்டு வரிவிதிப்பு ரெஜிஸ்தர் ஒன்றை நிர்ணயிக்கப்படும் முறையில் தயாரிக்கும்படியும் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியின் கவுன்ஸிலுக்குச் சேர வேண்டிய ஏதாவது ஒரு வரி அல்லது கட்டணத்தை வசூலித்துக் கொடுக்கும்படிரெவின்யூ இலாகா சிப்பந்திகளைக் கேட்டுக்கொள்ள அதிகாரம் உண்டு. அவ்வாறு வசூலிப்பதற்காக கலெக்டர் பொது அல்லது பிரத்யேக உத்தரவு பிறப்பித்து, வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகையில் 64 சதவிகிதத்துக்கு மேற்படாமல் நி ல வ ரி. இலாகா சிப்பந்திகளுக்கு ஊதியமாக கொடுக்கலாம். 127. வசூலிக்க முடியாத தொகைகளை தள்ளி விடுதல் (Write - off) நிர்ணயிக்கப்படும் நிபந்தனைகளுக்கும் வரையறை களுக்கும் உட்பட்டு, பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தனக்கு சேர வேண்டிய வரி அல்லது கட்டணம் அல்லது வேறு எந்தத் தொகையையாவது வசூலிக்க முடியாது என்று அபிப்பிராயப்பட்டால், அத் தொகையைக் கணக்கிலிருந்து அடித்து விடலாம். ஆல்ை, கலெக்டராவது, அவருடைய சிப்பந்திகளாவது பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்குச் சேரவேண்டிய வரியை வசூலித்துக் கொடுப்பதற்குப் பொறுப் பாளியாக இருந்தால், மேற்படி கட்டணம், வரி அல்லது தொகையை வசூலிக்க வழியில்லாத சந்தர்ப்பத்தில், கணக்கி லிருந்து அடித்துவிடும் அதிகாரம் ரெவின்யூ போர்டு அல்லது மேல் அதிகாரத்துக்கு உட்பட்டு கலெக்டரால் அல்லது அவருடைய அதிகாரம் பெற்ற ஒரு அதிகாரிக்கு உண்டு. 128. lây Gza sèsî unirsiruih (Local education grant) ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கும் ஆண்டு தோறும் பிரதேசக் கல்வி மான்யம் ஒன்றை அரசாங்கம் அளிக்க வேண்டும். அத்தொகை கீழ்க்கண்ட விதமாகக் கணக்கிடப்பட வேண்டும்.