பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 (7) ஆரம்பக் கல்விக்காக பஞ்சாயத்து யூனியன் கவுன் சில் நன்கொடை தரக்கூடிய, அல்லது பெற்றுக்கொள்ளக் கூடிய மற்ற எல்லா தொகைகளும். 187. பட்டணப் பஞ்சாயத்து நிதியும் கிராமப் பஞ்சாயத்து நிதியும் பட்டணப் பஞ்சாயத்து, கிராமப்_பஞ்சாயத்து ஆகிய வற்றின் நிதியில் வரவு வைக்கப்பட வேண்டிய இனங்கள் வருமாறு: (1) இந்தச் சட்டத்தின் 119 முதல் 122-வது பிரிவு வரையில் விதிக்கப்பட்டுள்ள வீட்டு வரி, தொழில் வரி, வாகன வரி, மற்றும் இதர வரி அல்லது செஸ் அல்லது கட்டணம். (2) 124-வது பிரிவின்படி சொத்து மாற்றங்களின் மீது விதிக்கப்படும் தீர்வை. - (3) 115-வது பிரிவின்படி பிரதேச வரியிலிருந்து கிடைக்கும் பங்கு. (4) கிராமப் பஞ்சாயத்து நிதி சம்பந்தமாக கிராம வீட்டு வரிக்கு இணையான மான்யம். (5) 1989-ம் வருஷத்திய சென்னே பொது சுகாதாரச் & Lääär [Madras Public Health Act, 1939] 117-6,151, 118-வது பிரிவுகளின்கீழ் பிரஸ்தாட கிராமத்தில் விதித்து வசூலிக்கப்படும் வரிகளும், சுங்கங்களும். (6) பஞ்சாயத்து மார்க்கட்டுகள் என்று வகைப்படுத்தப் பட்டவற்றில் விதிக்கப்படும் கட்டணங்களில் அரசாங்கம் நிர்ணயித்த விகிதப்படி, பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸி லுக்கு பஞ்சாயத்து ஏதாவது உதவித்தொகை கொடுத்திருந் தால் அதை கழித்துக் கொண்டு மீதியுள்ளவை. (7) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் மார்க்கட்டுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மார்க்கட்டுகள் விஷயமாய் பஞ்சாயத்துக்களுக்கு, பஞ்சாயத்து யூனியன் கொடுத்துள்ள உதவித் தொகை. -