பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 (d) பஞ்சாயத்து அல்லது அதன் நிர்வாக அதிகாரி அலலது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அல்லது கமிஷ னரை, சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து தகவல் அல்லது அறிக்கை அனுப்பும்படி கேட்கலாம்; (e) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அல்லது நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர்ை வருமானம் தரும் ஒரு ஸ்தாபனத்தின் உரிமையை விட்டுக் கொடுக்குமுன் அல்லது மூடிவிடுமுன் தம்முடைய முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று சொல்லலாம்; (f) பஞ்சாயத்து அல்லது நிர்வாக அதிகாரி அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது கமிஷனரின் அலுவல்கள் சம்பந்தமாக எவையேனும் குறிப்புகளே அவர்க ளுடைய ஆலோசனைக்காக எழுதி வைக்கலாம். 147. இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட தீர்மானங்கள் முதலியவற்றை நிறுத்தி வைப்பது அல்லது ரத்து செய்வதற்கான அதிகாரம் (1) இன்ஸ்பெக்டர் எழுத்து மூலமான உத்தரவின் மூலம (i) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அல்லது வெளி யிடப்பட்ட உத்தரவு, வழங்கிய அனுமதி அல்லது லேசென்ஸை நிறுத்தி வைக்கலாம் அ ல் ல து ரத்து செய்யலாம். (ii) செய்யப்படப்போகும், அல்லது செய்யப்பட்டு வரும் எந்தச் செயலேயும் சட்டபூர்வமாக இல்லாமல் அல்லது துஷ்பிரயோகமாக இருப்பதாக அவர் அபிப்ராயப்பட்டால்; - (a) அத்தகைய தீர்மானம், உத்தரவு, லேசென்ஸ், அனுமதி, அல்லது செயல் சட்டபூர்வமாக இல்லே என்று அவர் கருதில்ை; (b) மே ற் க ண் ட ைவ இச்சட்டத்தின்படியுள்ள அதிகாரங்களுக்கு அல்லது வேறு ஏதாவது ஒரு சட்டத்துக்கு மிகையாக உள்ளவை அல்லது துஷ்பிரயோகம் செய்யப் பட்டவை அல்லது மற்றபடி விரும்பத்தகாதது என்று கருதிலுைம்; -