பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 156. பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்காகவும் அல்லது அவை கடமையில் தவறினுல், செயலாற்றும் அதிகாரிகளின் அதிகாரங்களும் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் பற்றிய நிதிப் பொறுப்பும் இந்தச் சட்டத்தின்படி ஒரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் சார்பில் அல்லது அவை கட்மையை நிறைவேற்ற தவறிவிட்டால், அதற்காக சட்டப் படி நடவடிக்கை எடுத்துக்கொள்ள அரசாங்கத்துக்கோ, இன்ஸ்பெக்டருக்கோ அல்லது இன்னொரு நபருக்கோ, இதற் காக அவசியமாய் உள்ள அதிகாரங்கள் உண்டு; மேலும் இந்தச் சட்டத்தின்கீழ் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து, யூனியன் கவுன்ஸில் அதன் அதிகாரிகள் அல்லது ஊழியர் களுக்கு உள்ள அதிகாரங்களே மேற்படி இன்ஸ்பெக்டர் அல்லது இன்னொரு நபர் செலுத்தும்போது அவர்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்குமோ அதே பாதுகாப்பு இவர் களுக்கும்.உண்டு.அத்தகைய அதிகாரங்களே செலுத்துவதால் நஷ்டம் அடைகிற ஒருவர், அந்தச் செயல், பஞ்சாயத்தினுல் அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலால் அல்லது அதன் அதிகாரிகளால் அல்லது அதன் ஊழியர்களால் செய்யப்பட்டிருந்தால் எப்படியோ அப்படியே பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் நிதியிலிருந்து ஈடு செய்து கொள்ளலாம். - 157. அதிகாரங்களைப் பிரித்துக் கொடுத்தல் (1) அரசாங்கம் ஒரு அறிவிப்பின் மூலம், கலெக்டர் அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரிக்காவது அதிகார சபைக்காவது; ஒரு பஞ்சாயத்தின் பொருட்டு அல்லது ஒரே தரமான பஞ்சாயத்துகளின் தொகுதியின் பொருட்டு அல்லது ஒரு வட்டாரத்தில் உள்ள எல்லா பஞ்சாயத்துகளின் பொருட்டு அல்லது ஒரு வட்டாரத்தில் உள்ள எல்லா பஞ் சாயத்து யூனியன் கவுன்ஸிலின் பொருட்டு அல்லது ஒரே தரமான பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்களின் தொகுதியின் பொருட்டு அல்லது எல்லா பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்களின் பொருட்டு, இந்தச் சட்டத்தின் மூலம் தங்களுக்கு அளித்துள்ள அதிகாரங்கள் எதையே யேனும் செலுத்தும்படி அதிகாரம் வழங்கலாம். ஆனால், இதில் விதிகள் இயற்றுவதற்கான அதிகாரங்கள் சேராது. அதேபோல அளிக்கப்பட்ட அதிகாரங்களே திரும்பவும் பெற்றுக் கொண்டுவிடலாம்.