பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237. பிரவேசிக்கவும், பார்வையிடவும் அதிகாரம் 162. பிரவேசிக்கவும், பார்வையிடவும் அதிகாரம் (1) நிர்ணயிக்கப்படக்கூடிய வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர் அல்லது அவரிடம் அதிகாரம் பெற்ற ஒருவர் தம்முடைய உதவியாளர்களுடனும் வேலேயாட்களுடனும் அல்லது அவர்கள் இல்லாமலும் ஒரு கட்டிடம் அல்லது, நிலத்தில் பிரவேசித்து, - (a) இந்தச் சட்டத்தின் பிரிவுகள், விதி, துனே விதி அல்லது உத்தரவில் கண்ட ஏற்பாடுகளின்கீழ் அனுமதிக்கப் பட்டுள்ள அல்லது இந்தச் சட்டத்தின்படி காரியங்கள் எதற்காக வேனும் அல்லது மேற்படி ஏற்பாடுகளே அனுசரித் தாவது நிறைவேற்ற அல்லது செய்ய அவசியமாகஉள்ள ஒரு விசாரணையை நடத்துவதற்காகவாவது; பார்வையிடலாம். பரிசோதனை செய்யலாம். விசாரணை நடத்தலாம். அளந்து பார்த்து மதிப்புப் போடலாம். அல்லது, - (b) அந்த இடம், கட்டிடம் அல்லது நிலத்தின் மீது குறிப்பிட்டபடி லேசென்ஸ் அல்லது அனுமதி இல்லாமல், எந்தக் காரியமும் செய்யப்படவில்லே என்றும் அல்லது அனுமதி, லேசென்ஸ் பெற்றுக்கொண்டு அவற்றை அனுசரிக் காமல் அந்தக் காரியம் செய்யவில்லே என்றும் தெரிந்து கொள்வதற்காக தாமே நேரில் பார்த்து தீர்மானிப்பதற்காக பிரவேசிக்கலாம். * - (2) உட்பிரிவு (1)ன் கீழ் உள்ள அதிகாரங்களேச் செலுத்தியதேைல்ா அல்லது பிரவேசிப்பதற்கு அவசியமான நிர்ப்பந்தம் பயன்படுத்தப்பட்டதனாலோ ஏற்பட்ட சேதம் அல்லது அசெளகரியத்துக்கு யார் மீதும் வழக்குத் தொடர முடியாது. 168, எடைகளையும் அளவுகளையும் சோதனை செய்தல் நிர்வாக அதிகாரி, கமிஷனர் அல்லது அவரிடம் அதிகாரம் பெற்ற ஒருவர், கிராமம் அல்லது நகரத்தில் அல்லது பஞ்சாயத்து யூனியனில் இருக்கிற மார்க்கட்டு களிலும் கடைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிற எடைக் கற்கள், அளவுகள் முதலியவற்றைப் பரிசோதித்துப் பார்க் கலாம். மேற்படி எடைகள், அளவுகள் சம்பந்தமாக, இந்தியன் பினல்கோட் XIII வது அத்தியாயத்தின்கீழ் செய்யப்படும் குற்றங்களைத் தடுப்பதற்காகவும் அவற்றிற்கு