பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 தண்டனே விதிப்பதற்காகவும் அவ்வாறு சோதனை போடலாம். 164. கிராமப் பெரியதனக்காரர் (Headman) கர்ணத்திடமிருந்து தகவல் கேட்க அதிகாரம் (1) பஞ்சாயத்தின் அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் அதிகார எல்லேக்குள் இருக்கின்ற ரெவின்யூ கிராமம் ஒன்றின் பெரியதனக்காரர் (Headman) அல்லது கர்ணத்திடம் அல்லது மேற்படி இருவரிடமும் நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர் எழுத்து மூலமான உத்தரவின் மூலம் அந்தக் கிராமம், அதன் ஒரு பகுதி சம்பந்தமாக அல்லது அதில் உள்ள ஒரு நபர் அல்லது சொத்து சம்பந்தமாக நிர்ணயிக்கப்படக்கூடிய இ ன ங் க ளி ல் அடங்குகிற ஒரு பொருள்பற்றி தகவல் அனுப்பும்படி கேட்கலாம். - (2) இன்ன காலத்துக்குள் தகவல் அளிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட வேண்டும். ஆனால், நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர் அவ்வப்போது கால அளவை நீடிக்கலாம். காலவரையறை 165. பாக்கிகளை வசூலிப்பதற்கு காலவரையறை இச் சட்டத்தின்படி அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதி, துணேவிதி, அல்லது உத்தரவின்கீழ் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியனுக்குச் சேர வேண்டிய வரி அல்லது இதர பாக்கி விஷயமாக, எந்தத் தேதியிலிருந்து முதலில் ஜப்தி செய்யப்பட்டதோ அல்லது வழக்கு எப்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கலாமோ அந்தக் கால முதல் ஆறு வருஷங்கள் கழிந்த பிறகு, அந்த வரி அல்லது தொகைவிஷயமாய் வழக்கு, ஜப்தி அல்லது பிராது எதுவும் தொடரக்கூடாது. lost 351.56ir (Prosecutions) oupé, Gösir (Suits) முதலியன 186. பிராது செய்ய அதிகாரம் பெற்ற நபர்கள் இச்சட்டத்தில் வேறு வி தம க வெளிப்படையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலன்றி, இந்தச் சட்டத்திற்கு