பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பெருவாரியான மக்கள் நாட்டுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்; மக்களாட்சி தழைப்பதற்கு உரிய வழிவகைகாேயெல்லாம் நாம் மேற்கொண்ட போதிலும் கிராமப் புறங்களிடை உள்ள பெருவாரியான மக்களிடையே மக்களாட்சி இன்னும் பரவ வில்லை. அவர்களிடையே இன்னும் விழிப்பு உண்ர்ச்சி ஏற் படவில்லை என்றே சொல்ல வேண்டும். பொதுவாக, நம்நாட்டு மண்ணில் வளர்ந்தால்தான், மக்களாட்சி தழைக்க முடியும். கிராமத்தில் அது உறுதியாக வேர் கொள்ள வேண்டும், மக்களாட்சி தழைப்பதற்காக மக்கள் பெரிதும் பாடுபடவேண்டும். அவர்களது விதியை நிர்ணயிக்கும் உரிமை அவர்களிடமே இருக்க வேண்டும்.உரிமை உணர்ச்சியுடனும், கடமை உணர்ச்சியுடனும் அவர்கள் எதி லும் ஈடுபட வேண்டும். அப்போதுதான் அவர்களது வாழ்வு மக்களாட்சியுடன் இணைந்து கலக்க முடியும். சிறந்த பயன் களே விளைவிக்க முடியும். 4. பஞ்சாயத்து-அடிப்படை நிறுவனம் மக்களிடையே உள்ள மக்களாட்சி ஆர்வத்தை இன்று கண்கூடாகக் காணலாம். ' பிரதிநிதித்துவம் இல்லாதபோது, வரி இல்லை ” என்று எழுப்பப்பட்ட முழக்கத்தின் மூலம் ஏற் பட்ட உணர்ச்சியினை இன்று கிராமப் புறங்களில் தெளிவாகக் காணலாம். அதன் விளைவாக மக்களாட்சியின் பெயரால் பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், மாவட்ட அபிவிருத்தி மன்றம் ஆகிய அமைப்புக்களிடம் அதிகாரத்தையும் உரிமை யினையும் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இந்தத் துறையில் சில மாநிலங்கள் முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன._ தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கும், பொறுப்பு களைப் பகிர்ந்து கொள்வதற்கும் உரிய வாய்ப்பை மக்களுக்கு அளிக்கும் அடிப்படை நிறுவனமே பஞ்சாயத்தாகும். இதன் மூலம் மக்கள் பஞ்சாயத்து நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடும்படி தூண்டப்படுகிருர்கள். ஆனல் அவர்களது வாழ்க்கையோடு ஏதாவது ஒரு வகையில் சம்பந்தப்பட்டா லொழிய, அன்ருட நடவடிக்கைகளில் எல்லாருமே ஈடுபடுவ தில்ல்ை. அதன் பெயருக்கேற்ப மக்களாட்சியைத் தழைக்க வைக்க, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரிய வாழ்நெறியாக அதனை ஆக்கவேண்டும். உள்ளூர் சச்சரவுகளில் அதிக அளவு கவனம் செலுத்துவோர்க்கும், ஈடுபடுவோர்க்கும் ஒரு புகலி