பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனிசிபாலிட்டியாக அமைக்கும் விஷயத்தில் அல்லது ஒரு பிரதேசத்தை முனிசிபாலிட்டியில் சேர்க்கும் விஷயத்தில் அனுசரிக்க வேண்டிய கொள்கைகள் பற்றி; (2) இச்சட்டத்தில் வெளிப்படையாக ஏற்பாடு செய் திராத, வாக்காளர் பட்டியல், தேர்தல் பற்றிய சகல விஷயங் களும், அபேட்சகர்கள் கட்டவேண்டிய டெபாஸிட் தொகை, அவற்றைப் பறிமுதல் செய்வதற்கான நிபந்தனைகள், தேர்தல் சம்பந்தமான விசாரணை நடத்துவது, விவாதங் களேத் தீர்மானிப்பதும் இதில் அடங்கும்; (3) 12-வது பிரிவைச் சேர்ந்த (1)வது உட்பிரிவின் விலக்கு நிபந்தனேயின்கீழ், பெண்களேயும், ஷெடியூல் ஜாதி யினரையும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலில் எந்தக் கால அளவுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும்; அப்படி யாரும் சேர்த்துக் கொள்ளப்படாவிட்டால், அந்தக் காலி ஸ்தானங்களேப் பூர்த்தி செய்யும் விதம் பற்றியும்; (4) இச்சட்டத்தின் காரியங்களுக்காக, ஜ ன த் தொகையை நிச்சயிப்பது பற்றியும்; (5) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களுடைய தலைவர், துனேத் தலைவர், அங்கத்தினர் ராஜிநாமா செய்வதும், அந்த ராஜிநாமாக்கள் அமுலுக்கு வரவேண்டிய தேதிகள் ஆகியவை பற்றியும்; (6) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தலைவரையும், துணைத் தலைவரையும், அங்கத்தினர்கள் கேள்வி கேட்பதும்; கூட்டங்களில் தீர்மானங்களே பிரேரேரிப்பது பற்றியும்; (?) பஞ்சாயத்துகளிலும் பஞ்சாயத்து யூ ைய ன் கவுன்சில்களிலும் கமிட்டிகளே அமைப்பது, அவைகளில் வெளியார்களே சேர்த்துக் கொள்வது, கமிட்டிகளுக்கு அலுவல்களேப் பிரித்துக் கொடுப்பது பற்றியும்; (8) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களின் கூட்டங்கள், கமிட்டிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறை, கோரம், விவகாரங்களே நடத்துவது ஆகியவை பற்றி; (9) செலவுகள் செய்வது சம்பந்தமாக பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், அதன் தலைவர், கமிட்டிகள், கமிஷ் னருக்கு உள்ள அதிகாரங்கள், கடமைகள் பற்றி;