பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பஞ்சாயத்துக் கோர்ட்டின் உத்தியோகபூர்வமான அங்கத் தினர்களாக இருந்து வருவதும் நின்றுபோகும். சம்பந்தப் பட்ட தலைவரும் துணைத் தலைவரும் அந்தத் தேதியிலிருந்து அந்தப் பஞ்சாயத்து கோர்ட்டின் உத்தியோகபூர்வமான தலைவராகவும் துணேத் தலைவராகவும் இருப்பது நின்று விடும். - (ii) மேற்சொன்ன தேதியில், பஞ்சாயத்தில் பைசலா காமல் உள்ள சகல சிவில், கிரிமினல் வழக்குகளும், நடவடிக் கைகளும், 1888-ம் வருஷத்திய சென்னை, கிராம கோர்ட் டுகள் சட்டத்தின் 9 (1)ன் பிரிவின்படி சம்பந்தப்பட்ட பிரதேசத்துக்கென அமைக்கப்பட்ட பஞ்சாயத்து கோர்ட் டுக்கு மாற்றலாகிவிடும். அம்மாதிரி கோர்ட் அந்தப் பிரதேசத்துக்கு அமைக்கப்படாவிட்டால், மேற்படி சட்டத்தின் 7-வது பிரிவின்கீழ் அமைக்கப்பட்ட கிராம முன்சீப் கோர்ட் அந்த வழக்குகளேயும் நடவடிக்கைகளையும் விசாரித்து தீர்ப்பளிக்க அதிகாரம் உடையது. மேற்கண்ட தேதிக்கு முன்னர் பஞ்சாயத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு களும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளும் 1888-ம் வருஷத்திய சென்னே கிராம கோர்ட்டுகள் சட்டப்படி அமைக்கப் பட்ட பஞ்சாயத்து கோர்ட்டினலோ அல்லது கிராம கோர்ட்டிேைலா வழங்கப்பட்ட தீர்ப்புகள் போலவும், உத்தரவுகள் போலவும் அமுலாகத் தொடங்கும். 192. 1920-ம் வருஷத்திய சென்னை W-வது சட்டத் திருத்தம் [Madras District Municipalities Act, 1920] இந்தச் சட்டத்தின்படி ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியில் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அமைக்கப் பட்டதும் 1920-ம் வருஷத்திய ஜில்லா முனிஸிபாலிடிகள் சட்டம், கீழ்க்கண்ட திருத்தங்களுக்கு இணங்க அந்த பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதிக்குப் பிரயோகப்படும். : له 6526 9عي (a) 4-வது பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில், ராஜ்ய அரசாங்கம்’ என்னும் சொற்களுக்குப் பதிலாக 1955-ம் வருஷத்திய சென்னை பஞ்சாயத்துகள் சட்டம், 5-வது பிரிவுக்கு உட்பட்டு ராஜ்ய அரசாங்கம்’ என்று சேர்த் துக்கொள்ள வேண்டும்: