பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 (2) ஒரு கிராமம் அல்லது பிரதேசம் பற்றிய பிரஸ்தாபம் எதுவும் நில்ேமைக்கு ஏற்றவாறு ஒரு பஞ்சாயத்து கிராமம், பஞ்சாயத்துப் பட்டணம், பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதி அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலேக் குறிப்ப தாகக் கருத வேண்டும். . (3) லோகல் போர்டுகள் என்பது பற்றிய பிரஸ்தாபம் ஜில்லா போர்டுகள், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள், பஞ்சாயத்துகளைக் குறிப்பதாகக் கருத வேண்டும். . (4) 1920-ம் வருஷத்திய, சென்னே லோகல் போர்டுகள் சட்டம் பற்றிய பிரஸ்தாபம், 1920-ம் வருஷத்திய சென்னே ஜில்லா போர்டுகள் சட்டம், 1950-ம் வருஷத்திய சென்னை, கிராமப் பஞ்சாயத்துகள் சட்டம், 1958-ம் வருஷத்திய சென்னே பஞ்சாயத்து சட்டம் ஆகியவைகளேக் குறிப்பதாகக் கருத வேண்டும். (5) 1920-ம் வருஷத்திய சென்னே ஜில்லா போர்டுகள் சட்டம் அல்லது 1950-ம் வருஷத்திய கிராமப் பஞ்சாயத்துகள் பற்றிய பிரஸ்தாபம், 1958-ம் வருஷத்திய பஞ்சாயத்துகள் சட்டத்தை குறிப்பிடுவதாகக் கருத வேண்டும். (6) ஜில்லாபோர்டு அல்லது அதன் தலைவர் பற்றிய பிரஸ் தாபம், அதிகார எல்லேயுள்ள பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலேயும் அதன் தலேவரையும் குறிப்பதாகக் கருத வேண்டும். 198. சிக்கல்களே அகற்றுவதற்கு அதிகாரம் இச்சட்டத்தின் ஆரம்பத்துக்குப் பிறகு, இதன் ஏற்பாடு களே முதன் முதலில் அமுலுக்குக் கொண்டு வருவதிலாவது அல்லது ஒரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலே முதன் முதலில் அமைப்பதிலாவது அல்லது புனரமைப்பிலாவது ஏதாயினும் சிக்கல்கள் ஏற்பட்டால், அரசாங்கம் அந்த சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல், அந்தச் சிக்கலே நீக்குவதற்கு அவசியம் என்று தங்களுக்குத் தோன்றுகிற உத்தரவை பிறப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.