பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - (ii) தேர்தலில் லஞ்சப் பழக்கங்கள் கையாளப்படுவ தைத் தடுப்பதற்கு மேற்படி அபேட்சகர் நியாயமான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டார். (iii) கையாளப்பட்ட லஞ்சப் பழக்கங்கள் அற்பமா னவை, மிகச்சிறியவை, முக்கியமானவையல்ல ; (y) மற்ற எல்லா விஷயங்களிலும், தேர்தலில் அந்த அபேட்சகரோ, அவரது ஏஜண்டுகளோ, எந்த விதமான, லஞ்சப் பழக்கத்தையும் கையாளவில்லே. விளக்கம் :-இவ் விதியின் காரியத்துக்காக, உபசரித் தல், என்பது ஒரு நபரை அல்லது யாராவது ஒரு நபரை வாக்களிக்கச் செய்வதற்காக அல்லது வாக்களிக்காமல் இருக்கச் செய்வதற்காக நேரடியாகவேனும் மறைமுகமாக வேனும் தூண்டும் நோக்கத்துடன் அல்லது அவர் வாக் களித்ததற்காக அல்லது வாக்கு அளிக்கலாம் என்னும் விருப்பத்திற்காக அவருக்கு அல்லது வேறு யாராவது ஒரு நபருக்கு வெகுமதியாக உணவு, பானம்,கோரிக்கை அல்ல்து வேறு ஏதேனும் கொடுப்பதற்கு அல்லது செய்வதற்கு ஏற்படும் செலவு முழுவதையும் அல்லது அதன் ஏதாவது ஒரு பகுதியை யாரேனும் ஒரு நபர் பெற்றுக்கொள்வது எனப் பொருள்படும். - 12. (1) விசாரணை முடிவடைந்தவுடன், தேர்ந்தெடுக் கப்பட்ட அபேட்சகரின் அல்லது அபேட்சகர்களின் தேர்தல் 11-வது விதியின்கீழ் செல்லுபடி ஆகாமற் போய்விடுமா என்பதைத் தேர்தல் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். (2) தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகரின் அல்லது அபேட்சகர்களின் தேர்தல் செல்லாதென தேர்தல் நீதிமன் றத்தின் அறிவிப்பை மேற்கொண்டும் அடியிற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் : (a) இந்த விதிகளின்கீழ், அந்த ஸ்தானத்துக்கு உரிமை கொண்டாடியவரும், தேர்தல் மனுவில் ஒரு கட்சிக் காரராயிருந்தவருமான யாராவது ஒரு நபர் கிரமமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக் க வேண்டும்; அல்லது (b) புதிய தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவு - பிறப்பிக்க வேண்டும் .