பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சம்பந்தப்பட்ட பாசனக்கட்டு வேலேயிலிருந்து நேரடி யாகப் பாசனம் பெறும் நஞ்சை, புஞ்சை நிலங்களின் விஷ யத்தில் ஒரே மாதிரியான விகிதத்தில் கட்டணம் விதித்து வாங்கப்பட வேண்டும். மேற்படி பாசனக்கட்டு வேலையி லிருந்து இறைவைமூலம் பாசனம் பெறும் நஞ்சை, புஞ்சை நிலங்களின் விஷயத்தில் மேற்சொன்ன விகிதத்தின் பேர் பாதிக் கட்டணம் விதிக்கப்பட வேண்டும். விளக்கம்-இக்கட்டணம், - நிலத்திற்கு விதிக்கப்படக் கூடிய நஞ்செய், புஞ்செய் தீர்வை. தண்ணிர் வரி, ஆகி யவைகளுடன் அதிகப்படியாக விதிக்கப்படுவதாகும். - 2. மேற்படி கட்டணம் கிராமத் தலைவர்மூலம் அல்லது மேற்படி கிராமம் அல்லது நகரம் அல்லது அதன் பகுதியின் மீது அதிகார வரம்புள்ள நிலவரித் துறை சிப்பந்திகளைச் சேர்ந்த யாராவது ஒரு நபர்மூலம் பஞ்சாயத்து வசூலிக்க வேண்டும். பஞ்சாயத்து அவ்வாறு வசூலித்த தொகையைக் கலெக்டரின் பொது அல்லது விசேஷ உத்தரவின்படி நிர் வகித்துச் செலவழிக்க வேண்டும். கிராமத் தலைவர் தொகையை வசூலிக்கும் பொருட்டு கர்ணம் மேற்படி கட்டணம் சம்பந்தமான வசூல் கணக்கைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும். கிராமத் தலைவருக்கு அல்லது நில வரித்துறை சிப்பந்திகளேச் சேர்ந்த யாராவது ஒரு நபருக்கு பஞ்சாயத்துச் சட்டத்தின் 126-வது பிரிவின்கீழ் இது சார்பாக கலெக்டர் பொது அல்லது விசேஷ உத்தரவு பிறப் பித்து தீர்மானிக்கக்கூடியவாறு ஊதியம் அளிக்கப்பட வேண்டும். 3. கட்டணம் கேட்கப்படுவதன்மேல், சந்தர்ப்பத்துக் கேற்ப பதிவு பெற்ற நிலச் சொந்தக்காரர் அல்லது பதிவு பெற்ற கூட்டு நிலச் சொந்தக்காரர்கள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், மேற்படி நிலச் சொந்தக்காரர் அல்லது சொந்தக்காரர்களிட மிருந்து மேற்படி கட்டணம் நிலவரி பாக்கி போலவே வசூலிக்கப்படலாம். 4. மேற்படி கட்டணங்களின் மொத்தத்தை ஒரு தனி நிதியாக அமைத்து, சம்பந்தப்பட்ட பாசனக்கட்டு வேலேயின் பராமரிப்புக்கும், செப்பனிடுதலுக்கும் பஞ்சா யத்து பொருத்தமெனக் கருதுகிறவாறு அதைச் செல்வு செய்ய வேண்டும். மற்ற காரியங்களுக்காக அதைப் பயன் படுத்தக்கூடாது.