பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/565

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 11. மேற்படி சட்டத்தின் 86-வது பிரிவின் (4) உட் பிரிவின் கீழ் பஞ்சாயத்து புறம்போக்குகளில் ஏற்படும் ஆக்கிரமிப்புகளே அகற்றுவதற்குத் தக்க நடவடிக்கைகளே. எடுத்துக்கொள்ள வேண்டும். பஞ்சாயத்துகள் இதில் தவறு. செய்தால் ஆக்கிரமிப்பு கண்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, ரெவின்யு டிவிஷனல் அதிகாரி தமக்கு ஆட்சேபகரமாய்த் தோன்றிய ஆக்கிரமிப்பை அகற்ற லாம். ரெவின்யு டிவிஷனல் அதிகாரியின் உத்தரவின் மீது கலெக்டருக்கு அப்பீல் செய்துகொள்ளலாம். அத்தகைய ஆக்கிரமிப்பு ஆட்சேபகரமானதுதானு இல்லையா என்பது குறித்து கலெக்டர் செய்யும் தீர்மானமே முடிவானதாகும். 88. சமுதாய நிலங்களைப் பயன்படுத்துதல் (ப. ச. 87. (1) (a) (b) (c) (2)) விதிகள் 1. பஞ்சாயத்துச் சட்டத்தின் 87 (1) (a) பிரிவில் சொல்லிய நிலங்களைப் பயன்படுத்துவது குறித்து ஒழுங்கு செய்வதற்கு சட்டத்தின் 86-வது பிரிவின் (2) உட்பிரிவின் கீழ் செய்த விதிகள் தேவையான மாறுதல்களோடு பயன்படும். . . . 2. ஏதேனும் ஒரு நிலம் குறித்து பஞ்சாயத்துச் சட்டத் தின் 87 (1) (a) பிரிவின் கீழ் அதிகாரங்களைச் செலுத்து. கையில் பஞ்சாயத்து, மேற்படி நிலத்தின் மீது நிலத்தின், சொந்தக்காரருக்கு உள்ள அனந்தர வாரிசு உரிமையைப் பாதிக்கும் வகையில் எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது; மேற்படி நிலமானது, ஒரு நகரம் அல்லது கிராம வளவா யிருந்து, சட்ட பூர்வமான காரியத்துக்காக, குடிமக்களின் பொது உபயோகத்தில் இல்லாத அதன் ஏதாவது ஒரு காலியிடத்தை வீட்டு மனேயாகக் கொடுக்கும் அவரது உரிமையைப் பாதிக்கும் வகையிலும் எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது. - .ே ஏதாவது ஒரு நிலம், சென்னை 1908-ஆம் ஆண்டு எஸ்டேட்டு நிலச் சட்டத்தின் 3-வது பிரிவைச் சேர்ந்த, 16-வது பகுதியின் (b) உட்பகுதியில் சொல்லிய விவரங்.