பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 33. தலைவர் அல்லது துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மான்ம் கொண்டுவருவது எப்படி? பஞ்சாயத்துச் சட்டம் 152வது பிரிவில், பஞ்சாயத்து தலைவர் அல்லது துணைத்தலைவர்மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதைப்பற்றி விளக்கப் பட்டிருக்கி றது. அதாவது பஞ்சாயத்தின் மொத்த அங்கத்தினர்களில் பாதிப் பேருக்கு குறையாமல் கையொப்பமிட்டு, தாங்கள் அத்தகைய பிரேரணையைக் கொண்டு வரப்போவது பற்றி நோட்டீஸ் மூலம் அந்தத் தாலுகா தாசில்தாரிடம் தெரிவிக்க வேண்டும். பிரேரணையின் நகலையும், தலைவர் அல்லது துணைத்தலைவர் மீதுள்ள குற்றச் சாட்டுகளின் அறிவிப்பையும், நோட்டிவில் கையொப்ப மிட்டுள்ளவர்களில் யாராவது இரண்டு அங்கத்தினர்கள் நேரடியாகத் தாசில்தாரிடம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, குற்றச்சாட்டு, நோட்டி வின் நகலை, சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது துணைத்தலை வருக்கு தாசில்தார் அனுப்பி வைப்பார். மேலும், அது கிடைத்த ஒரு வாரத்துக்குள் குற்றச் சாட்டுகள் சம்பந்தமாக தங்கள் பதில தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்வார். அதன் பின், அந்தப் பிரேரணையை ஆலோசிக்க தாசில்தார், ஒரு தேதியை நிர்ணயித்து, பஞ்சாயத்து காரியாலயத்தில் கூட்டம் நடத்த வேண்டும். பஞ்சாயத்து அங்கத்தினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாதவர்களுடைய ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப் படுமாயின், இன்ஸ்பெக்டர் ஒரு அறிவிப்பின் மூலம் சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது துண்ேத் தலைவரை பதவியிலிருந்து விலக்கிவிடலாம். மேற் சொன்ன விதமாக, மெஜாரிட்டி ஆதரவுடன், பிரேரணை நிறைவேருவிட்டால், அல்லது கோரம் இல்லாமல் கூட்டம் நடைபெற முடியாமற் போயிருந்தால், அடுத்த ஆறு மாத காலத்துக்கு அந்தப் பஞ்சாயத்தின் தலைவர் அல்லது துணைத்தலைவர்மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர முடியாது. தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவி ஏற்றுக் கொண்ட ஆறு மாத காலத்துக்குள் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரமுடியாது. தலைவர் அல்லது துணைத்தலைவர், பஞ்சாயத்துச் சட்டத் தின் பிரிவுகள், விதிகள், சட்ட பூர்வமான உத்தரவுகள் முதலியவற்றை நிறைவேற்ற மறுத்தாலும், அவற்றிற்கு