பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. வகுப்பின் பெயர், நிர்வகிக்கும் முறை, மற்றும் பஞ்சாயத் திற்குத் தேவைப்ப்டும், மேற்கொண்டு, விவரங்கள் ஆகியவை களும் மேற்கூறிய மனுவில் இருக்க வேண்டும். (3) மனுவைப்பெற்றுக்கொண்ட ஒரு பஞ்சாயத்து (a). அலசென்ஸ் வழங்கலாம்; அல்லது வழங்க மறுக்க லாம் ; - (b) அந்த இடத்தின்மீதுள்ள ஆட்சேபனைகள் நீக்கப் படும்வர்ை லேசென்ஸ் வழங்காமல் தள்ளிப் போடலாம் ; அல்லது அது கோரும் இதர விவரங்கள் ஒப்படைக்கப்படும் வரையும் மேற்படி பஞ்சாயத்து, லேசென்ஸ் வழங்குவதை தள்ளி வைக்கலாம். (4) உட்பிரிவு (8)ன்புடி, பஞ்சாயத்து பிறப்பித்த எந்த உத்தரவையும் ரெவின்யு டிவிஷனல் அதிகாரி ரத்து செய்யலாம் ; அல்லது திருத்தலாம். 4. (1) ஒவ்வொரு பஞ்சாயத்து அலுவலகத்திலும், 1-8 வரையிலுள்ள விதிகளின்படி ஏற்படுத்தப்பட்ட, பதிவு செய்யப்பட்ட, லேசென்ஸ் வழங்கப்பட்ட இடங்களும், பஞ்சாயத்து சட்டம் அமுலாவதற்கு முன்பு ஏற்படுத்தப் பட்ட, பதிவு செய்யப்பட்ட, லேசென்ஸ் வழங்கப்பட்ட அத்தகைய எல்லா இடங்களும் குறிக்கப்பட்ட ஒரு புத்தகம் வைக்கப்பட வேண்டும். (2) மேற்சொன்ன வகையில், ஏற்படுத்தப்பட்ட, பதிவு செய்யப்பட்ட, லேசென்ஸ் வழங்கப்பட்ட அத்தகைய் இடம்பற்றிய விவரமுடைய ஆங்கிலத்திலும், தமிழிலும் உள்ள அறிக்கை ஒன்று, மேற்சொன்ன இடுகாடு அல்ல்து சுடுகாடு அல்லது இதர இடம் ஆகியவற்றின் வாசலிலோ அல்லது அதற்குப் பக்கத்திலோ எல்லோருக்கும் தெரியக் கூடிய ஓரிடத்தில் ஒட்டப்பட வேண்டும். 5. எந்த ஒரு நபரும், மேற்சொன்னவாறு ஏற்பாடு செய்யப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அல்லது லேசென்ஸ் வழங் கப்பட்ட இடத்தைத் தவிர, குடியிருக்கும் இடத்திற்கு அல்லது. குடிதண்ணிருக்குப் பயன்படும் எந்த நீர்நிலை களுக்கும் நூறு கெஜத்திற்கு உள்ளது இருக்கும் வேறு எந்த இத்திலும் பிரேதத்தைப் புதைக்கவோ, எரிக்கவோ அல்லது வேறு வகையில் ஒரு வகை செய்யவோ கூட்ாது; அல்லது அவ்வாறு புதைப்பதற்கு, எரிப்பதற்கு அல்லது