பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 கீழ்ப்படியாவிட்டாலும் அதிகார துஷ்பிரயோகம் செய்தா லும் அவர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கு, பஞ்சாயத்து சட்டம் 150-வது பிரிவில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது. 34. தேர்தல் தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கை என்ன ? தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் தேர்தல் ஆட்சேப மனுவை தேர்தல் கோர்ட் டாரிடம் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் கோர்ட் என்பது -ஒவ்வொரு பஞ்சாயத்தும் எந்த அதிகார எல்லைக்கு உட் பட்டிருக்கிறதோ அதனுடைய ஜில்லா முன்சீப் கோர்ட்டா கும். நீலகிரி ஜில்லாவில் மட்டும் உதக மண்டலத்திலுள்ள சப் ஜட்ஜ் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின், தேர்தல் கோர்ட் மேற்படி மனுவை விசாரிக்கும். விசாரணை யின் முடிவில், வெற்றி பெற்ற அபேட்சகரின் தேர்தல் செல் லுமா, செல்லாதா அல்லது வேறு எவர் வெற்றி பெறத் தகுதி யுடையவர் என்பதையும், அல்லது புதிதாகவே தேர்தல் நடத்தப்படவேண்டுமா என்பதைப் பற்றியும் தீ ர் ப் பு அளிக்கும். தேர்தல் ஆட்சேப மனு தாக்கல் செய்வதற்கான நட வடிக்கை பஞ்சாயத்து தேர்தல் தகராறு சம்பந்தமான சட்ட விதிகளில் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. 35. வாக்காளர் பட்டியலைத் தயாரித்து, ஒழுங்கு படுத்துவது யார்? பஞ்சாயத்து வாக்காளர் பட்டியல்களை தயாரித்து, ஒழுங்கு படுத்துபவர்கள் டிவிஷனல் பஞ்சாயத்து அதிகாரிகள். 36. வாக்காளர் பட்டியலை எல்லோரும் பார்வை யிடலாமா? எல்லோரும் தாராளமாகப் பார்வையிடலாம். 37. அபேட்சகர்களுக்கு வாக்காளர் பட்டியல் கிடைக்குமா? வாக்காளர் பட்டியலுக்கு உரிய விலையைச் செலுத்தி எல்லோரும் பெற்றுக் கொள்ளலாம்.