பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 8. உரிமை உறுதிகூறும் டிக்ரியின்கீழ் உரிம்ை மாற்றங்கள் - நிறைவேற்று நடவடிக்கை எடுக்கப்பட முடியாத உரிமை உறுதிகூறும் டிக்ரியின்கீழ் அதாவது, ஒருவர் பதிவு பெற்ற உரிமை உள்ளவராவதற்காக, ஒருவரிடம் நிலைபெற வேண்டிய உரிமையை உறுதி கூறமட்டுமே செய்கிற டிக்ரியின் கீழ் பதிவேட்டில் உரிமை மாற்றம் கோரப்பட்டால், அந்த டிக்ரியின் உறுதிகூறப்பட்ட பிரதியைக் கொண்டு வந்து கொடுப்பதன்மேல் நிர்வாக அதிகாரி பதிவேட்டில் உரிமை மாற்றத்தைச் செய்யலாம். 4. வாரிசு உரிமை காரணமாக ஏற்படுகிற மாற்றங்கள் வாரிசு உரிமை காரணமாக ஏற்படுகிற மாற்றங்களே தகுந்தவாறு, திருப்திகரமாக நிரூபிப்பதன் மேல், நிர்வாக அதிகாரி பதிவேட்டில் உரிமை மாற்றம் செய்யப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கலாம். 2. பதிவேட்டில் உரிமை மாற்றம் செய்து அல்லது அவ்வாறு செய்ய மறுத்து நிர்வாக அதிகாரி பிறப்பிக்கிற உத்தரவின்மீது பஞ்சாயத்துக்கு அப்பீல் செய்து கொள்ள லாம். எந்த உத்தரவின்மீது அப்பீல் செய்துகொள்ளப்படு கிறதோ அந்த உத்தரவைப் பெற்றுக்கொண்ட தேதிக்குப் பிறகு முப்பது நாட்களுக்குள் அப்பில் செய்து கொள்ள வேண்டும். 40. மூலதன மதிப்பு அல்லாத வேறு அடிப்படையில் வீட்டுவரி விதித்தல் (ப. ச. 120) விதிகள் 1. வீட்டுவரி விதிக்க பஞ்சாயத்து அனுமதி அளித் திருந்தால், அது எதிர்காலத்தின் தேதி முதல் அமுலுக்கு வர வேண்டும். அந்த தேதி அந்த ஆண்டின் ஏப்ரல் முதல் தேதியாகவோ, அக்டோபர் முதல் தேதியாகவோ இருக்க லாம். ஓர் ஆண்டில் வரி விதிப்பு அமுலுக்கு வந்த பிறகு அந்த ஆண்டு சம்பந்தப்பட்ட வரையில் வரி விகிதங்களே மாற்றுவதற்குரிய அல்லது அதை விதித்து வாங்க வேண்டிய