பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/590

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 (3) துணை விதி (1)ல் கண்ட வகைகளில் ஒன்றை அல்லது பலவற்றைத் தொழில்வரி செலுத்துவதினின்றும் பஞ்சாயத்து விலக்களிக்கலாம். அதைவிடக் குறைந்த வகை வரி செலுத்த வேண்டியிருந்தால், அதற்கு மேற்பட்ட வகைக்கு வரி செலுத்துவதினின்றும் விலக்கு அளிக்கக் கி.டாது. 2. ஒரு கம்பெனி அல்லது நபர் ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் அலுவலகம் உள்ளவராகவோ அல்லது வேலே உள்ளவராகவோ இருந்தால், அவர் அந்த கிராமத் துக்குள் அல்லது நகரத்திற்குள் வியாபாரம் நடத்தியிருப்ப தாக அல்லது தொழில் செய்திருப்பதாக, வேலே அல்லது பணி புரிந்திருப்பதாக அல்லது ஏதேனும் ஒரு உத்தியோகம் செய்திருப்பதாகக் கருதப்பட வேண்டும். 3. (1) ஒரு கம்பெனி அல்லது நபர் ஏதேனும் ஒரு அரை ஆண்டில் கடன் கொடுப்பது அல்லாத ஏதேனும் ஒரு தொழிலே ஒரு பஞ்சாயத்தில் மட்டும் செய்து வந்தால், அதி லிருந்து அந்தக் கம்பெனிக்கு அல்லது நபருக்குக் கிடைக்கிற வருமானம், அந்த அரை ஆண்டில் பஞ்சாயத்துச் சட்டத்தில் தொழில் வரி விதிக்கும் காரியத்துக்காக: (a) அந்த அரை ஆண்டு அடங்கிய ஆண்டுக்காக 1922ஆம் ஆண்டு இந்திய வருமான வரிச் சட்டத்தின் கீழ் அந்தக் கம்பெனிக்கு அல்லது நபருக்கு வருமான வரி நிர்ண யிக்கப்பட்டால், வருமான வரியை நிர்ணயிக்கும் காரியத்துக் காக மேற்படி வருமான வரிச் சட்டத்தின் 10-வது பிரிவின் கீழ் அந்தத் தொழிலின் லாபம் கணக்கிடப்பட்ட தொகையில் பாதி எனக் கருதப்பட வேண்டும் ; (b) மேற்படி லாபத் தொகை எவ்வளவு என நிச்ச யித்து அறிய முடியாவிட்டால், அல்லது அந்தக் கம்பெனி அல்லது நபருக்கு வருமான வரி நிர்ணயிக்க முடியாவிட்டால், அந்த அரை ஆண்டில் அல்லது இதுவும் நிர்ணயிக்கப்பட முடியாவிட்டால் சென்ற ஆண்டின் நிகரான அரை ஆண்டில் அந்தப் பஞ்சாயத்துப் பகுதியில் நடத்தப்பட்ட வியா பாரத்தின் மொத்த வியாபாரத் தொகையில், 4-வது விதியை அனுசரித்து கணக்கிட்ட சத விகிதங்கள் எனக் கருதப்பட வேண்டும். (2) ஒரு கம்பெனி அல்லது நபர் பணம் கடின் கொடுப்பதல்லாத வேறு தொழிலே, ஒரு பகுதி பஞ்சாயத்