பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 கிடைக்கும் வருமானமாக நிர்வாக அதிகாரி ஏற்றுக் கொள்ளக் கடமைப்பட்டவராவார். (3) துணே விதி (1)-ன்கீழ் சொல்லியுள்ளபடி விவரக் கணக்கு எதுவும் கொடுக்கப்படாவிட்டால் அல்லது அவ்வாறு கொடுக்கப்பட்ட விவரக் கணக்கு சரியானதல்ல அல்லது பூரணமானதல்ல என்று நிர்வாக அதிகாரி சந்தேகமறத் தெரிந்துகொண்டால், அவர் அந்தக் கம்பெனியின் அல்லது நபரின் அரை ஆண்டு வருமானம் என்னவென்று தாம் மதிப்பிடுகிற வருமானத்திற்குப் பொருத்தமான வகையில் அந்தக் கம்பெனியை அல்லது நபரைச் சேர்க்க வேண்டும். (4) நிர்வாக அதிகாரி துணே விதி (3)ன்கீழ் ஏதேனும ஒரு கம்பெனியை அல்லது நபரை வகைப்படுத்துகையில் அடியிற் கண்டவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்: செய்யப்பட்ட தொழிலின் தன்மையும் மதிப்பும்; குடி யிருப்பிடம், தொழிலிடம் ஆகியவற்றின் அளவும், வாடகை யும்; வியாபாரம் செய்த சரக்குகளின் அளவும் எண்ணிக்கை யும்; அமர்த்திக்கொண்ட ஊழியர்களின் எண்ணிக்கை; முன்னரே செலுத்தப்பட்ட வருமானவரி, (5) ஏதேனும் ஒரு கம்பெனியின் அல்லது நபரின் கணக்குகளே வரவழைப்பதற்கு நிர்வாக அதிகாரிக்கு உரிமையில்லே. (6) ஏதாவது ஒரு கம்பெனியிடமிருந்து அல்லது நபரிட மிருந்து வர வேண்டிய தொழில் வரி செலுத்தப்படாவிட்டால், நிர்வாக அதிகாரி அந்தக் கம்பெனிக்கு அல்லது நபருக்கு அறிவிப்பு ஒன்றைச் சேர்ப்பிக்கச் செய்து, அவ்வாறு சேர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பதினேந்து நாட்களுக்குள் அதைச் செலுத்துமாறு கேட்க வேண்டும். (7) ஏதாவது ஒரு கம்பெனி அல்லது நபர் தொழில் வரி நிர்ணயத்துக்காக கொடுத்த அறிக்கைகள், அனுப்பிய விவரக் கணக்குகள், கொண்டு வந்த தஸ்த்ாவேஜுகள் அல்லது கணக்குகள் ரகசியமானதாகக் கருதப்படவேண்டும். அவற்றின் பிரதிகளேப் பொதுமக்களுக்குக் கொடுக்கக் கூடாது. (8) பஞ்சாயத்தின் நிர்வாக அதிகாரியானவர், ஏதேனும் ஒரு கட்டிடத்தின் அல்லது நிலத்தின் சொந்தக்