பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/596

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}9 (4) அந்தக் கிராமத்திற்குள் அல்லது நகரத்திற்குள் மட்டுமே கடன் கொடுக்கும் தொழிலல்லாத மற்ற தொழில் நடைபெற்ருல் (a) அந்த அரை ஆண்டு அடங்கிய ஆண்டுக்காக அந்தக் கம்பெனிக்கு அல்லது நபருக்கு வருமான வரி நிர்ண யிக்கப்பட்டிருந்தால், அத்தகைய வருமான வரி நிர்ணயிப் பதற்காக இந்திய வருமான வரிச் சட்டத்தின் 10-வது பிரிவின்கீழ் அந்தக் கம்பெனியின் அல்லது நபரின் லாபம் கணக்கிடப்பட்ட தொகை ; .-- . ------ (b) மேற்படி லாபம் இன்னதென அறிய முடியா விட்டால், அல்லது அந்த அரை ஆண்டுக்கு நிகரான ஆண்டுக்கு வருமான வரி நிர்ணயிக்கப்பட்டிராவிட்டால்

  • (i) அந்த அரை ஆண்டில் அந்தக் கிராமத்திற்குள் அல்லது நகரத்திற்குள் நடத்தப்பட்ட தொழிலின் மொத்த வியாபாரத் தொகை; அல்லது

(ii) அந்த மொத்த வியாபாரத் தொகை இன்ன தென நிச்சயித்து அறிய முடியாவிட்டால், சென்ற ஆண்டின் நிகரான அரை ஆண்டில் நடந்த தொழிலின் மொத்த வியாபாரத் தொகை. (5) அந்தக் கிராமத்திற்குள் அல்லது நகரத்திற்குள் ஒரு பங்கும் அந்தக் கிராமத்திற்கு, நகரத்திற்கு, வெளியே ஒரு பங்குமாக கடன் கொடுக்கும் தொழில் அல்லாத மற்ற தொழில் கம்பெனி, அல்லது நபரால் நடத்தப்பெற்ருல் (a) அந்த அரை ஆண்டில் ஆந்தத் கிராமத்தில் அல்லது நகரத்தில் நடத்தப்பட்ட தொழிலின் மொத்த வியாபாரத் தொகை; அல்லது (b) அத்தகைய வியாபாரத் தொகை இன்னதென நிச்சயித்து அறிய முடியாவிட்டால், சென்ற ஆண்டின் நிகரான அரை ஆண்டில் அந்தக் கிராமத்தில் அல்லது நகரத்தில் அந்தத் தொழிலின் மொத்த வியாபாரத் தொகை. (6) (a) கிராமம் அல்லது நகரத்திற்கு வெளியே நடத்தும் வியாபாரத்திலிருந்து வரி விதிக்கப்பட்டவருக்கு கிடைக்கும் வருமானம்.