பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/601

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 (2) பத்திரம் என்பது, எந்த அசையாச் சொத்தின் மாற்றத்தின்மீது 124-வது பிரிவின்கீழ் தீர்வை விதிக்கத் தக்கதோ அந்தச் சொத்தை விற்பது, பரிவர்த்தனே செய்வது வெகுமதியாகக் கொடுப்பது, அனுபோக உரிமையுடன் அடமானம் வைப்பது, நிரந்தரமாகக் குத்தகைக்கு விடுவது சம்பந்தப்பட்ட பத்திரம் என்று பொருள்படும். (3) பிரிவு என்பது, மேற்படி சட்டத்தின்கீழ் உள்ள ஒரு பிரிவு என்று பொருள். (4) முத்திரைத்தாள் சட்டம்' என்பது, தமிழ் நாட்டில் அமுலில் உள்ள 1889-ம் ஆண்டு இந்திய முத்திரைத்தாள் & Lih (Indian stamp Act, 18891 croro Gurger. (5) சொத்து மாற்ற வரி என்பது, 124-வது பிரிவின்கீழ் சொத்து மாற்றங்களின் மீது விதிக்கத்தக்க வரி என்று பொருள். (6) இந்த விதிகளில் பொருள் கூறப்படாத எல்லா சொற்களும், சொற்ருெடர்களும் முத்திரைத்தாள் சட்டத் திலுைம், அதன்கீழ் உள்ள விதிகளிலுைம் அவ்வவற்றிற்கு `காடுக்கப்பட்டுள்ள பொருள்களே உடையனவாகும். 3. முத்திரைத்தாள் சட்டத்தின் பிரிவுகள் சொத்து மாற்றத்திற்கு பயன்படும் என்பது (1) முத்திரைத்தாள் சட்டத்தின் எல்லா பிரிவுகளும் அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளும், மேற்படி சட்டத்தின்கீழ் பிதிக்கப்படத்தக்க தீர்வை விஷயமாகப் பயன்படுவது போலவே, சொத்து மாற்றத் தீர்வை சம்பந்தமாகவும் கூடிய மட்டில் பயன்படும். (2) சொத்து மாற்றத் தீர்வை அல்லது அதன் ஏதாவது ஒரு பாகம், பத்து காசுகளுக்குக் குறைவாயிருந்தால், அந்தத் தீர்வை அல்லது அதன் பாகம் வசூலிக்கப்படக்கூடாது. 4. பத்திரங்களில் குறிப்பிடவேண்டிய விவரங்கள் சம்பந்தமாக பதிவு அதிகாரிகளின் கடமைகள் (1) பதிவு செய்யப்படுவதற்காக யாராவது ஒரு பதிவு அலுவலருக்கு ஒரு பத்திரம் கொடுக்கப்பட்டால், மேற்படி சட்டத்தின் 27-வது பிரிவில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பத்திரத்தில் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்று பார்க்க வேண்டும். பஞ்சாயத்துச் சட்டத்தின் 27-வது