பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/629

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#42 சம்மன் கிடைக்கப்பெற்ற நபர், ஆந்த உத்தரவில் குறித்துள்ள நேரத்திலும், இடத்திலும் வந்திருக்க வேண்டு மென அதில் கட்டளேயிட்டிருக்க வேண்டும்; சாட்சியம் கொடுப்பதற்காக வரவேண்டுமா, தஸ்தரவேஜ; கொண்டு வருவதற்காக வரவேண்டுமா, அல்லது இரண்டு காரியுங்க ளுக்காகவும் வரவேண்டுமா என்பதை அதில் குறிக்க வேண்டும்; எந்த தஸ்தாவேஜு வேண்டியுள்ளதோ அதை, அந்த சம்மனில் விவரமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும், 3. சம்மனே அனுப்ப வேண்டிய நபர் யாரோ, அவ ரிடமே நேரடியாகச் சேர்ப்பிக்க வேண்டும்; அல்லது அவர் இருப்பிடத்தில் காணப்படாவிடில் அவருடன் வசித்து வரும் அவருடைய குடும்பத்தினருள் வயது வந்தவர் ஒருவரிடம் அதைக் கொடுத்து அவரிடம் சேர்ப்பிக்கச் சொல்லலாம், அல்லது அவர் வசிக்கும் ரெவின்யு கிராமத்தலைவரிடம் கொடுத்து அவரிடம் சேர்ப்பிக்கச் சொல்லலாம். 4. ஒருவ்ரை சாட்சியம் கொடுக்க வரவழைக்காமல், தஸ்தாவேஜூகளேக் கொண்டு வருவதற்கு மட்டும் அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கலாம்; தஸ் தாவேஜை மட்டுமே கொண்டு வருவதற்கான சம்மனேப் பெற்ற நபர், அதை தாமே நேரில் கொண்டுவராமல் வேறு நபர் மூலம் அனுப்பி வைத்தாலும் அவர் அந்த சம்மனே மதித்து நடந்து இருப்ப தாகவே கருதப்படுவார். 5. சாட்சியம் கொடுக்க வேண்டிய நபர், நோய் காரணமாக, அல்லது ஊனம் காரணமாக சம்மன் அனுப்பிய அதிகாரி முன் வர இயலாவிட்டால், அல்லது அவரது தன்மை அல்லது அவர் பெண்ணுயிருப்பதன் காரணமாக, அவரை அழைப்பது முறையாக இல்லாவிட்டால், சம்மன் அனுப்பும் அதிகாரி தாமாகவே, அல்லது எந்த நபரின் சாட்சியம் தேவைப்படுகிறதோ அவர் விண்ணப்பித்துக் கொள்வதன்மீது அவர் தம் முன் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லையென்று உத்தரவிடலாம். இது காரியத் திற்காக அந்த அதிகாரி நியமித்து அனுப்பும் ஒரு கீழ் உத்தி யோகஸ்தர் அவரை விசாரிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பும் அதிகாரி உத்தரவிட வேண்டும். - 6. இந்த வி தி க ளி ன் கீ ழ் பிறப்பிக்கப்பட்ட ஓர் சம்மனுக்கு கீழ்ப்படிந்து நடக்க ஒருவர் தவறில்ை, அவருக்கு 100 ரூபாய் வரையில் அபராதத் தண்டனை விதிக்கப்படத் தக்கதாகும்.