பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/635

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i48. மசோதா ஒன்றை, அல்லது திருத்தங்களின் மசோதா ஒன்றை வெளியிட வேண்டும். அந்த மசோதா எந்தத் தேதியன்று அல்லது எந்தத் தேதிக்குப் பிறகு, ஆலோச னேக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதைக் குறிப்பிட்டு ஒர் அறிக்கையை அவர் வெளியிட வேண்டும். மேலும், பஞ்சாயத்து துணே விதிகளே அல்லது திருத்தங்களேச் செய்வதற்கு முன்பு, அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து அந்த மசோதா விஷயமாக வரும் ஏதாவது ஒரு ஆட்சேபனே, அல்லது அபிப்பிராயக் குறிப்பைப் ப்ெற்றுக்கொண்டு அ ைதி ஆலோசிக்க வேண்டும். இந்த விதியின்படி அறிவிப்பு, (3) விதியில் சொல்லி யுள்ளபடி வெளியிடப்பட வேண்டும். ஆட்சேபனைகளே அல்லது அபிப்பிராயக் குறிப்புகளே பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிடும் கால அளவு 30 தினங்களுக்குக் குறைவாக இருக்கக்கூடாது. 2. ஒரு பஞ்சாயத்து செய்யும் ஏதாவது ஒரு துனே விதி அல்லது ரத்து அல்லது மாற்றம் உடனடியாக அமு லுக்கு வராது. நீர் வழங்கல், வடிகால் வேலேகள், சம்பந்தப் பட்ட துணைவிதிகள் நீங்கலாக இதர துணைவிதிகள் விஷய மாய்ச் சம்பந்தப்பட்ட ரெவின்யு டிவிஷனல் அதிகாரி அவற்றை ஒப்புக்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும். நீர் வழங்கல், வடிகால் வேலேகள் சம்பந்தப்பட்ட துணை விதிகள் விஷயமாய் சானிடரி எஞ்ஜீனியர் அவற்றை ஒப்புக் கொண்டு உறுதிப்படுத்த வேண்டும். அதன் பிறகு அவை அமுலுக்கு வரும். 3. ஏதாவது ஒரு துணே விதியின் அல்லது ஒரு துணை விதியின் ரத்து அல்லது மாற்றம் முறைப்படி உறுதிப்படுத் தப்படும்போது அது தமிழில் இல்லாவிட்டால், அதை தமிழில் மொழிபெயர்த்து, பஞ்சாயத்து அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அதன் நகல் ஒன்று மேற்படி அலுவ லகத்தின் அறிவிப்புப் பலகையிலும், பஞ்சாயத்து கட்டளே யிடக்கூடிய வேறு இடங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். பஞ்சாயத்தின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் பகுதிகளில் எல்லாம் தண்டோரா போட்டு அல்லது வேறு விதமாக அந்த நகல் ஒட்டி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் அசல் பிரதி பஞ்சாயத்து அலுவலகத்தில் பார்வை யிடுவதற்காக வைக்கப்பட்டிருக்கிறது என்றும் அறிவிக்க வேண்டும்.