பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/653

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 75. அரசாங்கத்தாரிடம் நிலைபெற்றுள்ள அதிகாரங்கள் (ப. ச. 157. (1)) விதி 1958-ம் ஆண்டு சென்னைப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 157-வது பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின்கீழ், அரசாங் கத்தார் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களில் விதிகள் செய்வதற்கான அதிகாரம் நீங்கலாக, மற்ற அதிகா ரங்களே ஏதாவது ஒரு பிரதேசத்தில், ஏதாவது ஒருபஞ்சா யத்து, ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த பஞ்சாயத்துகள் அல்லது சகல பஞ்சாயத்துக்கள் விஷயமாக அல்லது ஏதாவது ஒரு பிரதேசத்திலுள்ள ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அல்லது ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் விஷயமாக கலெக்டர் அந்தஸ்துக்குக் குறையாத யாராவது ஒரு அதிகாரி அல்லது அலுவலருக்கு அதிகாரம் அளிக்கலாம். தங்களிடம் நிலே பெற்றுள்ளவையும் இந்த உத்தரவில் i-வது இணேப்பில் குறிப்பிட்டுள்ளவையுமான அதிகாரங்கள், தங்களால் செலுத் தப்பட வேண்டுமே அல்லாமல், மற்றவர்களால் செலுத்தப் படக்கூடாதெனவும், i-வது இணேப்பில் குறிப்பிட்டுள்ள அதிகாரங்கள், அதில் சொல்லியுள்ள அதிகாரிக்கு அல்லது அதிகாரிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்துள்ளனர். 1-வது இணைப்பு (1958-ம் ஆண்டு சென்னைப் பஞ்சாயத்துச் சட்டத்தின்கீழ் அரசாங்கத்தினரிடம் நிலைபெற்றுள்ளவையும் தங்களிடமே வைத்துள்ளவையுமான அதிகாரங்கள்.) சட்டப்பிரிவுகளும் அதிகாரங்களும் 1. (3) சட்டத்தின் பல்வேறுபிரிவுகளே அமுலுக்குக் கொண்டுவர தேதி அல்லது தேதிகள் நிர்ணயித்தல். - 2. (15) சட்டத்தின்கீழ் இன்ஸ்பெக்டருக்குள்ள அதி காரங்களேச் செலுத்தவும் கடம்ைகளேச் செய்யவும் யாராவது ஒரு அதிகாரியை நியமித்தல். 4. கிராமங்களே அல்லது நகரங்களே நகர அமைப்பு களாக அறிவித்தல்.