பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/687

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தாவுக்கு (பகுதி நேர குமாஸ்தாவோ, முழு நேர குமாஸ் தாவோ) கிராமப் பஞ்சாயத்து கொடுக்கின்ற படித் தொகையின் அளவு ஆண்டு ஒன்றுக்கு பஞ்சாயத்துக்குச் சாதாரணமாகக் கிடைக்கின்ற வருமானத்தின் அளவுக்குச் சற்றும் பொருந்தாக வகையில் அதிகமாக இருக்கக்கூடாது என்று அரசாங்கம் கருதுகிறது. - 4. முழு நேர ஊதியம் அளிக்கப்படுகின்ற நிர்வாக அதிகாரிகள்ே நியமனம் செய்யவேண்டியுள்ள பிரதேசங்களே நகரப் பஞ்சாயத்துகளாகவும், நகராட்சிகளாகவும் வரை யறுக்கும்போது, பிரதேசங்களில் கிடைக்கின்ற ஆண்டு வருமானம் மட்டுமல்லாமல், அந்தப் பிரதேசத்தின் மக்கள் தொகையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. என்பதை அரசாங்கம் உணர்த்துகிறது. ஒர் ஆண்டுக்கு, தலக்கு ஒரு ரூபாய்க்குக் குறையாழல், ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்தும் வருவாய் திரட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த விஷயங்களேயெல்லாம் அடிப்படை யாக வைத்துப் பார்த்து, கிராமப் பஞ்சாயத்து அதனுடைய குமாஸ்தாவுக்கு கீழ்க்கண்ட விகித முறையில் சம்பளமோ, படியோ அளித்தால், அது நியாயமானதாகவும் பஞ்சா யத்தின் சக்திக்கு உட்பட்டதாகவும் இருக்கும் என்று அரசாங்கம் கருதுகிறது : • பஞ்சாயத்து குமாஸ் தாவுக்கு அளிக்கப் படக்கூடிய உயர்ந்த பஞ்சாயத்தின் பிரிவு பட்ச சம்பளம் அல் லது படி விகிதம். (ஆண்டு ஒன்றுக்கு) ரூபாய 1. 1,500-க்கு குறைவான மக்கள் தொகை 15 உள்ள பஞ்சாயத்துகள். 2. 1,500-லிருந்து 2,000 வரை மக்கள் 20 தொகை உள்ள பஞ்சாயத்துகள். 3. 2,000-லிருந்து 3,000 வரை மக்கள் 25 தொகை உள்ள பஞ்சாயத்துகள். 4. 3,000-லிருந்து 4,000 வரை மக்கள் 30 தொகை உள்ள பஞ்சாயத்துகள். - 5, 4,000-லிருந்து 5,000 வரை மக்கள் 40 தொகை உள்ள பஞ்சாயத்துகள். 6. நகரப் பஞ்சாயத்துகள் என்று சேர்க்கப் 50 படாமல், 5,000க்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பஞ்சாயத்துகள்.