பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/697

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 தற்குப் பதிலாக பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தார் கணக்கிட வேண்டும். (ii) சொத்து மாற்றங்கள்மீது முத்திரை வரியின் பேரில் சர்சார்ஜ் விதிப்பதற்கு 1950-ம் ஆண்டு சென்னேக் கிராமப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 37-வது பிரிவு வகை செய்கிறது. பஞ்சாயத்துகளின் சார்பில் முத்திரை வரிமீது சர்சார்ஜ் விதிக்கப்பட்டு வசூலாகிய தொகைபற்றிய கணக்கை ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் தனித்தனியாகப் பதிவுத் துறையினர் வைத்து வரவேண்டும். ஒவ்வொரு பஞ்சா யத்துக்கும் உரிய மேற்படி கணக்கைக் கால் ஆண்டுக்கு ஒரு முறை தொகுத்து அந்தக் கால் ஆண்டுக்கான நிதித் தொகுப்புக் கணக்கை சென்னே அக்கவுண்டெண்ட் ஜெனர லுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளுக்குத் தொகை செலுத்துமாறு டிரஷரி களுக்கு வேண்டிய உத்தரவுகளேப் பிறப்பிப்பார். ஒரு பஞ்சாயத்து யூனியனிலுள்ள வெவ்வேறு பஞ்சாயத்து களுக்கு வகுலே விநியோகம் செய்யும் முறையைத் தவிர, மற்றைய விஷயங்களில் 1958-ம் ஆண்டு சென்&னப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 124-வது பிரிவும், 1950-ம் ஆண்டு சென்னேக் கிராமப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 67-வது பிரிவும் ஒரே மாதிரியானவையாகும். புதிய சட்டத்தின்படி சொத்து மாற்றங்களின் முத்திரை வரியின்மீது விதிக்கப் படும் சர்சார்ஜ் மூலம், பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டா ரத்தில் வசூலாகிற தொகையை ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒன்று திரட்டி ஒவ்வொரு கிராமத்தின் நிலவரி வருமானத்திற் கேற்ப மேற்படி வட்டாரத்திலுள்ள கிராமப் பஞ்சாயத்து களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். எனவே, இந்தப் புதுச் சட்டத்தின்படி ஒவ்வொரு பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தில் வசூலாகிற தொகையை முதலில் நிச்சயித்து அறியவேண்டும். பிறகு, பஞ்சாயத்து யூனியன் அலுவல கத்தின் மேற்படி தொகை விநியோகத்தைக் கணக்கிட்டுச் செய்ய வேண்டும். (iii) பஞ்சாயத்து யூனியன் மன்றத்துக்கும், பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தின்கீழ் நடைபெறும் பஞ்சாயத்து களுக்குமிடையே அரசாங்கத்தார் நிச்சயிக்கும் விகிதாச்சார முறைப்படி, துமாஷா வரி மூலம் வசூலாகிய நிகர வருமா னத்தைப் பிரித்துக் கொடுக்கும் அதிகாரத்தை 1955-ம் ஆண்டு சென்னைப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 195-வது பிரிவு அரசாங்கத்தாருக்கு வழங்குகிறது. இப்போது இருந்து