பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/726

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 ஒரு சட்டம் அல்லது விதியின்படி தேர்தல் குற்றத்தைச் செய்திருக்கிருர் அல்லது செய்ய உடந்தையாயிருக்கிருர் ; w (b) தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர், அடியிற் கண்ட லஞ்சப் பழக்கங்களில்ை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அல்லது அவரது தேர்தலுக்கு அந்தப் பழக்கங்கள் துணே செய்துள்ளன அல்லது அந்தப் பழக்கங்களில்ை அவருடைய தேர்தல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது ; அவையாவன : (i) இந்திய தண்டனைச் சட்டத்தின் X-A அத்தியா யத்தின்கீழ் வருகிற ஏதாவது ஒரு தேர்தல் குற்றத்தை அல்லது தேர்தல் ரகசியத்தை மீறுவது பற்றிய ஏதாவது ஒரு சட்டம் அல்லது விதியின்படி தேர்தல் குற்றத்தை அபேட்சகர் அல்லது அவருடைய ஏஜென்ட் அல்லது அபேட்சகருடைய அல்லது அவருடைய ஏஜென்டின் உடந்தையுடன் செய லாற்றுகிற யாராவது நபர் செய்திருப்பது ; (ii) வாக்காளர் தமது வாக்கைப் பதிவு செய்யும் காரியத்துக்காக அவரை எங்கேயாவது ஒரு இடத்துக்கு அழைத்துப் போவதற்கு அல்லது அங்கிருந்து திருப்பி அழைத்து வருவதற்கு யாராவது ஒருவருக்குப் பணம் கொடுத்திருப்பது அல்லது பணம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பது ; (iii) வாடகைக்கு விடுவதற்காக வைத்திருக்கும் அல்லது பிரயாணிகளே வாடகைக்கு அழைத்துச் செல்வதற் காக வைத்திருக்கும் யாதொரு படகை, வண்டியை அல்லது பிராணியைத் தேர்தல் காரியங்களுக்காக வாடகைக்கு எடுத்துக்கொள்வது, அமர்த்திக் கொள்வது, கடனுகப் பெறுவது அல்லது பயன்படுத்துவது ; ஆனால், யாராவது ஒரு வாக்காளர் வாக்குப் பதிவு செய்யும் இடத்திற்குத் தாம் போகவோ-அங்கிருந்து திரும்பி வரவோ ஏதாவது ஒரு படகினே, வண்டியை அல்லது பிராணியை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் அல்லது தமக்குச் சொந்தத்திலுள்ள படகினே, வண்டியை அல்லது பிராணியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது (c) நியமனச் சீட்டு விஷயமாய் ஏதேனும் ஒரு கிரமப் பிசகு ஏற்பட்டிருப்பதால் அல்லது நியமனச் சீட்டு அல்லது வாக்கு, தவருண முறையில் பெறப்பட்டிருப்பதால் அல்லது நிராகரிக்கப்பட்டிருப்பதால் அல்லது இந்த சட்டத்தின் பிரிவுகளே அல்லது அதன்கீழ்ச் செய்யப்பட்ட விதிகளே |ඳAlණු)