பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/727

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 சரித்து நடக்கத் தவறியிருப்பதால், தேர்தலின் முடிவு முக்கி யாம்சத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது : ஆனால், இதில் பின்னர் விளக்கியுள்ள உபசரனேகள் நீங்கலாக, லஞ்சமாக அமையாததும் இவ்விதியின் (b) பகு தியில் குறிப்பிட்டுள்ளதுமான ஏதேனும் ஒரு லஞ்சப் பழக்கம் கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறதாகவும், அந்த அபேட்சகர் அடியிற்கண்டதைச் சந்தேகமறத் தெரிவித்திருப்பதாகவும் நீதிமன்றம் கருதினால், அந்த அபேட்சகரின் தேர்தல் செல்லு படியாகுமென தேர்தல் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கலாம் : (a) அந்தத் தேர்தலில் மேற்படி அபேட்சகர் லஞ்சப் பழக்கம் எதையும் கையாளவில்லே அவ்வாறு ஏதேனும் கையாளப்பட்டிருந்தால் அது அந்த அபேட்சகரின் கருத் துக்கு விரோதமாகவும் அவரது அனுமதி அல்லது துணே இன்றியும் கையாளப்பட்டுள்ளது ; (b) தேர்தலில் லஞ்சப் பழக்கங்கள் கையாளப்படுவ தைத் தடுப்பதற்கு மேற்படி அபேட்சகர் நியாயமான எல்லா நடவடிக்கைகளேயும் எடுத்துக் கொண்டார் ; (c) கையாளப்பட்ட லஞ்சப் பழக்கங்கள் அற்ப மானவை, மிகச் சிறியவை, முக்கியமானவை அல்ல ; (d) மற்ற எல்லா விஷயங்களிலும் அந்தத் தேர்தலில் அந்த அபேட்சகரோ அவரது ஏஜெண்டுகளோ எந்த விதமான லஞ்சப் பழக்கத்தையும் கையாளவில்லே. விளக்கம்.-இந்த விதியின் காரியத்துக்காக, உப சரித்தல்’ என்பது யாராவது ஒரு நபரை வாக்கு அளிக்கச் செய்வதற்காக அல்லது வாக்களிக்காமல் இருக்கச் செய்வ தற்காக அவரை நேரடியாகவேனும் மறைமுகமாகவேனும் தூண்டும் நோக்கத்துடன் அல்லது அவர் வாக்களித்த தற்காக அல்லது வாக்களிக்காமலிருந்ததற்காக அவருக்கு அல்லது வேறு யாராவது ஒரு நபருக்கு வெகுமதியாக உணவு, பானம், கேளிக்கை அல்லது வேறு ஏதேனும் கொடுப்பதற்கு அல்லது செய்வதற்கு ஏற்படும் செலவு முழுவ தையும் அல்லது ஏதேனும் ஒரு பகுதியை யாரேனும் ஒரு நபர் ஏற்றுக்கொள்வது எனப் பொருள்படும். 12. (1) வி ச | ர ணே முடிவடைந்தவுடன், தேர்ந் தெடுக்கப்பட்ட அபேட்சகரின் அல்லது அபேட்சகர்களின் தேர்தல் 11-வது பிரிவின்கீழ் செல்லுபடி ஆகாமல் போய் விடுமா என்பதைத் தேர்தல் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.